Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விவாகரத்து முடிந்த கையோடு, 2வது திருமணத்திற்கு நாள் குறித்த இமான்

விவாகரத்து முடிந்த கையோடு, 2வது திருமணத்திற்கு நாள் குறித்த இமான்

தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது பல திரைப் பிரபலங்களின் விவாகரத்து செய்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது. அதுவும் தொடர்ந்து அடுத்தடுத்த விவாகரத்துச் செய்தி வருகிறது. இவர்கள் திரைத் துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் இந்த விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதாக […]

தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது பல திரைப் பிரபலங்களின் விவாகரத்து செய்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது. அதுவும் தொடர்ந்து அடுத்தடுத்த விவாகரத்துச் செய்தி வருகிறது. இவர்கள் திரைத் துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் இந்த விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பார்க்கப்படுகிறது.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள நடிகர்களின் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் டி இமான். சமீபத்தில் வெளியான அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களிலும் டி இமான் இசையமைத்துள்ளார்.

இவர் மோனிகா ரிச்சர்ட் என்பவரை கடந்த 2008-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தனது மனைவியை சட்டபூர்வமாக 2021 இல் விவாகரத்துப் பெற்றதாக அறிவித்திருந்தார்.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. சமீபத்தில் தனது முன்னாள் மனைவி மோனிகா ரிச்சட் மீது டி இமான் வழக்கு கொடுத்து இருந்தார். அதாவது தன்னுடைய மகள்களின் பாஸ்போர்ட் தன்னிடம் இருக்கிறது என்றும் அதை மறைத்து முறைகேடாக புதிய பாஸ்போர்ட் மோனிகா பெற்றுள்ளார் என புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் இமானுக்கு மறுமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது இமானின் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக ஒரு பெண்ணை பார்த்துள்ளனர். மேலும் இவர்களது திருமணம் இந்த வருடத்திற்குள் நடக்க உள்ளதாம்.

அதாவது இந்த ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதியன்று இமானுக்கு இரண்டாவது திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது இமான் தரப்பிலிருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதி செய்ய முடியும்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.