திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி 67 இந்த படத்தின் ரீமேக்கா?. சூப்பர் ஹிட் படத்தின் உரிமையை கைப்பற்றிய லோகேஷ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்றைய கோலிவுட்டின் சென்சேஷனல் இயக்குனர் ஆவார். கைதி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா உலகையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். அடுத்தடுத்து நடிகர் விஜய் மற்றும் கமலஹாசனுக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இவருடைய சமீபத்திய ரிலீஸ் ஆன விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

லோகேஷ் கனகராஜுடன் நடிகர் விஜய் இணைந்து பணியாற்றிய மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் நடிகர் விஜய்யின் 67 வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

Also Read: 7 நாட்களில் 5 சர்ச்சைகளில் சிக்கிய விஜய்.. அடுத்தடுத்து விழும் பெரும் அடி

தளபதி 67 கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டது எனவும், இதில் நீண்ட வருடங்களுக்கு பிறகு த்ரிஷா, விஜய்யுடன் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தளபதி 67 படத்தின் மற்றுமொரு அப்டேட் வந்திருக்கிறது. அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் படம் ‘எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ என்னும் ஆங்கில படத்தின் ரீமேக் ஆகும்.

‘எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ என்பது 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ஹாலிவுட் திரைப்படம் ஆகும். இது ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படம் டேவிட் க்ரோனேன்பெர்க் இயக்கத்தில் வெளியான ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் விக்கோ மோர்டென்சன், மரியா பெல்லோ, வில்லியம் ஹர்ட் மற்றும் எட் ஹாரிஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

Also Read: துப்பாக்கிகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட விஜய்.. தளபதி 67 போஸ்டரால் அதிர்ச்சியில் உறைந்த லோகேஷ்

இந்த படத்தின் உரிமையை தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கியிருக்கிறார். இந்த கதையில் தான் நடிகர் விஜய் நடிக்க இருக்கிறார். விஜய் நடிக்க இருப்பதால் அதற்கேற்றவாறு கதை அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சில் உருவாக இருப்பதால் நடிகர்கள் கார்த்தி, சூர்யா, கமலை எதிர்பார்க்கலாம்.

நடிகர் விஜய் இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் குடும்பத்துடன் லண்டன் செல்ல இருக்கிறார். அதன் பின்னர் விஜய் லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அப்டேட்டை டிசம்பரில் எதிர்பார்க்கலாம்.

Also Read: அஜீத்தின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் லோகேஷ்.. நீங்க வேற லெவல்ல யோசிக்கிறீங்க ப்ரோ!

Trending News