Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

56 வயசுல பொம்பள சோக்கு கேட்குதா.? முதல் மனைவியின் அந்தரங்க ரகசியத்தை உடைத்த பப்லு

56 வயசுல பொம்பள சோக்கு கேட்குதா.? முதல் மனைவியின் அந்தரங்க ரகசியத்தை உடைத்த பப்லு

சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தில் இருக்கும் பிரபலங்களுக்கு கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது. ஆனால் பணத்துக்காக இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது, முகம் சுளிக்கும் காட்சிகளில் நடிப்பது என்று திரையுலகம் வேற ரூட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த […]

சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தில் இருக்கும் பிரபலங்களுக்கு கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது. ஆனால் பணத்துக்காக இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது, முகம் சுளிக்கும் காட்சிகளில் நடிப்பது என்று திரையுலகம் வேற ரூட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த கலாச்சார சீரழிவு மெல்ல மெல்ல இப்போது சின்னத்திரை பக்கமும் திரும்பி இருக்கிறது.

திரையில் தான் இப்படி இருக்கிறது என்றால் நிஜ வாழ்விலும் பிரபலங்கள் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் வாழ்வது, அதை நியாயப்படுத்தும் வகையில் பேட்டி கொடுப்பது என்று தவறான முன்னுதாரணமாக இருக்கிறார்கள். அப்படி ஒரு விஷயத்தை தான் தற்போது சீரியல் நடிகர் பப்லு பிரித்விராஜ் செய்திருக்கிறார்.

60 வயதை நெருங்கப் போகும் இவர் தற்போது 23 வயதான இளம் பெண் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். முதல் மனைவி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில் தற்போது இவரின் இரண்டாவது திருமணம் சின்னத்திரை வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அவர் குறித்து பல செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பிரித்திவிராஜ் தற்போது பேசியிருக்கும் பேச்சு பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. அதாவது ஒரு பேட்டியில் அவரிடம் இந்த வயசிலும் உங்களுக்கு பொண்ணு சுகம் கேட்குதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கொஞ்சம் கூட தயங்காமல் ஆமா கேட்குது, தினமும் எனக்கு பொண்ணு சுகம் வேணும் என்று தடாலடியாக கூறி இருக்கிறார்.

மேலும் என் மனைவிக்கு நான் எந்த விதத்திலும் துரோகம் செய்வது கிடையாது. அவர் என்னை விட்டு பிரிந்த பிறகு தான் நான் வெளியில் எனக்கு தேவையானதை தேடினேன். என் முன்னாள் மனைவி கொடுக்காத காதலை, மரியாதையை, சுகத்தை இரண்டாம் மனைவி கொடுக்கிறார் என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அவர் பேசியிருக்கிறார்.

என்னதான் முதல் மனைவியுடன் பிரச்சினை இருந்தாலும் பொதுவெளியில் இவ்வளவு அநாகரிகமாக பிரித்விராஜ் பேசியது சில விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவர் பையனுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய வயதில் இப்படி இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு அதை நியாயப்படுத்தி இருக்கிறார். அவருடைய இந்த கருத்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.