சில்க் ஸ்மிதாவின் வெற்றிடத்தை பூர்த்தி செய்ய போராடிய 3 நடிகைகள்.. கவர்ச்சியின் உச்சம் தொட்டும் பலனில்லை

சில்க் ஸ்மிதா கோலிவுட் உலகத்தின் கனவு நாயகி என்றே சொல்லலாம். 80ஸ், 90ஸ் கால கதாநாயகிகள் கூட சில்க் ஸ்மிதாவிடம் போட்டி போட முடியாமல் தவித்தனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா உலகை தனி ராணியாக ஆண்டு வந்தார் என்றே சொல்லலாம். சிலர் சில்கிற்கு பிறகு அவர் இடத்தை பிடிக்க கூட முயற்சி செய்தார்கள். ஆனால் இதுவரை சில்க்கின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.

Y. விஜயா: Y. விஜயா, அந்த காலத்தில் படங்களில் நடன மங்கையாக வருவார். MGR, சிவாஜி, ரஜினி, கமல் படங்களில் நடனம் ஆடும் பெண்ணாக நடித்து கொண்டிருந்த இவர் விஜயகாந்த், சத்யராஜ் படங்களில் சில கேரக்டர்களிலும் நடித்தார். சின்னத்திரையிலும் சீரியல்களில் நடித்தார்.

ஷர்மிலி: ஆரம்பத்தில் காமெடி கலந்த கவர்ச்சி கேரக்டர்களில் நடித்து வந்தார் ஷர்மிலி . கோவை சரளாவுக்கு இணையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. கவுண்டமணியே கோவை சரளாவுக்கு பதிலாக ஷர்மிலியை பல படங்களில் சிபாரிசு செய்தார்.

ஷர்மிலிக்கு மார்க்கெட் அதிகமாகவே கேரளா பக்கம் சென்றார். ஷர்மிலி வரவினால் கவர்ச்சி நடிகை ஷகிலாவுக்கு அங்கே மார்க்கெட் சரிந்து விட்டது என்றே சொல்லலாம்.

மும்தாஜ்: நடிகை மும்தாஜ் இயக்குனர் விஜய டி ராஜேந்தர் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அவருடைய மோனிஷா என் மோனாலிசா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் குஷி திரைப்படத்தில் விஜயுடன் ஆடிய பாடலுக்கு பின் தான் மும்தாஜ் பிரபலமானார். அதன் பிறகு பீல்டு அவுட் ஆன மும்தாஜ் தன்னுடைய சினிமா குரு விஜய டி ராஜேந்தர்க்கு கதாநாயகியாக வீராசாமி படத்தில் நடித்தார். இப்போது மும்தாஜ் சினிமாவில் நடிப்பதில்லை.

இந்த மூன்று நடிகைகள் போட்டி போட்டாலும் சில்க்ஸ்மிதாவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. சில்க் கவர்ச்சி கேரக்டர்கள் பண்ண வில்லை என்றால் அவர் நிச்சயமாக ஒரு ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ந்து இருப்பார். ஆனால் அவரை அந்த கதாபாத்திரத்தில் பார்த்ததினால் அவரால் ஹீரோயினாக நடிக்க முடியவில்லை.