வித்தியாசமான நடிப்பில் மிளிரிய நடிகர் ஸ்ரீ.. வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த 4 இயக்குனர்கள்!

Actor Shri: நடிகர் ஸ்ரீ சம்பந்தப்பட்ட செய்திகள் தான் நேற்றிலிருந்து பெரிய அளவில் வைரலாகி வருகிறது. , ஸ்ரீயின் நிலைமைக்கு என்ன காரணம் என பலரும் தங்களுடைய சொந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் ஸ்ரீ மாதிரி கொடுத்து வைத்த ஒரு அறிமுக ஹீரோவை யாருமே பார்த்திருக்க முடியாது.

அவர் தேர்ந்தெடுத்த படங்கள் மற்றும் அவரை செதுக்கிய இயக்குனர்கள் என ஸ்ரீ இன்று நம்பர் ஒன் ஹீரோவாக வந்திருக்க வேண்டியவர். அப்படி ஸ்ரீயின் வாழ்க்கையை புரட்டி போட்ட நான்கு இயக்குனர்களை பற்றி பார்க்கலாம்.

ஸ்ரீ வாழ்க்கையை புரட்டி போட்ட 4 இயக்குனர்கள்!

பாலாஜி சக்திவேல்: இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீ நடிப்பில் வெளியான படம் வழக்கு எண் 18/9.

கனா காணும் காலங்கள் என்னும் சீரியலில் துருதுருவென்று நடித்த இளைஞனா இது என ரசிகர்கள் மிரண்டு போகும் அளவுக்கு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஸ்ரீ. இந்த படம் தேசிய விருது, மாநில விருது, விஜய் விருதுகள் என அள்ளி குவித்தது.

மிஸ்கின்: ஹீரோவாகி அடுத்த வருடம் மிஷ்கின் படத்தில் நடிப்பதென்றால் சும்மாவா. அந்த வாய்ப்பு கூட ஸ்ரீக்கு அசால்ட்டாக கிடைத்துவிட்டது.

2013 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது.

ரமேஷ் சுப்பிரமணியம்: ஆள சாச்சிபுட்டா கண்ணால பாட்டு இன்று வரை பலரின் பேவரைட் லிஸ்டில் இருக்கிறது.

இந்த பாட்டுக்குப் பிறகு நடிகர் ஸ்ரீக்கு பெண் ரசிகைகள் அதிகமானார்கள். 2016 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

லோகேஷ் கனகராஜ்: இன்று ஒட்டுமொத்த டாப் ஹீரோக்களும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பதற்கு காத்து கிடக்கிறார்கள்.

ஆனால் அறிமுக இயக்குனராக அவருக்கு கிடைத்த முதல் ஹீரோ நடிகர் ஸ்ரீ தான். அவருடைய நடிப்பில் லோகேஷ் இயக்கிய மாநகரம் படம் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது.