ஏற்றி விட்ட ஏணிகளான 4 இயக்குனர்களை கழட்டிவிட்ட சூர்யா.. வீண் ஆசையால் நடந்த விபரீதம்!

Suriya: வாழ்க்கை ஒரு வட்டம் அதுல ஜெயக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான் என்று விஜய் பஞ்ச் டயலாக் பேசி இருப்பார்.

அந்த வட்டத்தில் இப்போது சுற்றி சுழன்று கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. ஒரு காலகட்டத்தில் வெற்றிக்கு மேல் வெற்றி குவித்த சூர்யாவால் இப்போது ஆவரேஜ் வெற்றி கூட கொடுக்க முடியாமல் தடுமாறுகிறார்.

இதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தபோது தனக்கு ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர்களின் படத்தில் நடித்தால் வெற்றி பெற முடியாது என அவர் கழன்று கொண்ட சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது.

அப்படி சூரியாவை ஏற்றிவிட்டு பின்னால் அவரால் கழற்றி விடப்பட்ட நான்கு இயக்குனர்களை பற்றி பார்க்கலாம்.

பாலா: சூர்யா என்ற ஒரு நல்ல நடிகரை மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இயக்குனர் பாலாவுக்கு தான் உண்டு. நந்தா படம் சூர்யாவின் சினிமா வளர்ச்சிக்கு மற்றொரு பரிமாணமாக இருந்தது.

சூர்யாவுக்கு காமெடி வரும் என்பதை மக்களிடம் பறைசாற்றியது சீரியஸ் இயக்குனர் பாலா தான். ஆனால் பாலாவுடன் மூன்றாவது முறையாக சூர்யா பணிபுரிந்த வணங்கான் படத்தில் இருந்து விலகி விட்டார்.

கௌதம் மேனன்: சூர்யா ஆக்சன் ஹீரோவாக கூட நடிப்பார் என மக்களுக்கு தெரியவந்தது காக்க காக்க படத்தின் மூலம் தான்.

சாக்லேட் பாயாக சுற்றிக் கொண்டிருந்த சூர்யா அதிரடி ஆக்சன் ஹீரோவாக இந்த படத்தின் மூலம் பிரமோஷன் வாங்கினார்.

அதைத் தொடர்ந்து கௌதம் மேனன் உடன் பணிபுரிந்த வாரணம் ஆயிரம் படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. ஆனால் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கப் போவதில்லை என சூர்யா விலகிக் கொண்டார்.

ஹரி: சூர்யாவின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஹரி. இவருடைய இயக்கத்தில் வெளியான சிங்கம் 1 மற்றும் 2 பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து எடுக்கப்பட்ட மூன்றாவது பாகம் தோல்வியை தழுவ ஹரியின் அருவா படத்தில் நடிக்கப் போவதில்லை என சூர்யா முடிவெடுத்துவிட்டார்.

சுதா கொங்கரா: சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூழரை போற்று படம் அவருக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது. பராசக்தி படத்தை சூர்யாவை வைத்து இயக்க வேண்டும் என்று தான் சுதா முதலில் பணிகளை தொடங்கினார்.

இந்தி எதிர்ப்பு கதை என்பதாலேயே திடீரென்று பாதியில் இருந்து இந்த படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டார் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியது அவருடைய ரசிகர்களுக்கே பெரிய வருத்தத்தை கொடுத்தது.