சமீப காலமாக இந்த 5 நடிகர்கள் ஜெட் வேகத்தில் தங்களது சம்பளத்தை உயர்த்தி கொண்டிருக்கின்றனர். அதிலும் கோலிவுட்டில் செகண்ட் இன்னிங்சை துவங்கியிருக்கும் காமெடி புயல் வடிவேலு தாறுமாறாக சம்பளம் கேட்கிறார்.
விஷால்: தற்போது விஷால் லத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தும் படத்தை வெளியிட முடியாமல் படக்குழு தவித்து வருகிறது. இந்நிலையில் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் தளபதி 67 படத்தின் வில்லனாக முதலில் பிரித்திவிராஜ் தேர்வான நிலையில், இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஷால் நடிக்க உள்ளார். இதற்காக அவர் பல கோடிகள் சம்பளத்தை உயர்த்தி விட்டார். கிட்டத்தட்ட 25 கோடிகள் கேட்கிறார்.
ஆர்யா: ஆர்யா சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு பிறகு இவர் ஒரு வெற்றி படத்தை கொடுப்பதற்கு திணறி வருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கேப்டன் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து இவரது படங்கள் ஓடாத நிலையில் அடுத்தடுத்து கமிட் ஆகும் படங்களுக்கு 15 கோடிகளுக்கு மேல் சம்பளம் கேட்கிறார்.
வடிவேலு: வைகைப்புயல் வடிவேலுக்கு ரெட் கார்ட் தடை நீங்கி இப்போது தான் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது வரை அவரது படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை. மேலும் இப்போதே வடிவேலு 5, 6 படங்களில் நடித்துக் கொண்டு மிக பிஸியாக இருந்து வருகிறார். இதனால் 30 நாள் கால்ஷீட்க்கு 5 கோடிகள் சம்பளம் கேட்கிறார்.
சிம்பு: மாநாடு, வெந்து தணிந்தது காடு என தொடர்ந்து வெற்றிகளை வசப்படுத்திக் கொண்டிருக்கும் சிம்பு அடுத்ததாக கேஜிஎஃப் பட தயாரிப்பு நிறுவனத்துடன், சுதா கொங்கரா நடிக்க இருந்தார். இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் சிம்பு இந்தப் படத்திற்காக அதிக சம்பளம் கேட்டதால் சுதா கொங்கரா தற்போது இந்த படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்.
எஸ் ஜே சூர்யா: தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கி கொண்டிருக்கும் எஸ் ஜே சூர்யா மாநாடு படத்தில் தனுஷ்கோடி கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். இப்படி தொடர்ந்து எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தும் எஸ் ஜே சூர்யா அடுத்தடுத்து கமிட் ஆகும் படங்களில் 20 கோடிகள் கொடுத்தால்தான் வில்லனாக நடிப்பேன் இல்லையென்றால் கிளம்புங்கள் என்று கராறாக பேசி வருகிறார்.
இவ்வாறு இந்த 5 நடிகர்களில் சிலர் மார்க்கெட் இருப்பதால் சம்பளம் கேட்பது நியாயம் தான். ஆனால் மார்க்கெட்டே இல்லாமல் இருக்கும் நடிகர்களும் அநியாயத்திற்கு சம்பளத்தை கேட்டு படத்தின் பட்ஜெட்டை உயர்த்துகின்றனர்.