2023ல் அனைவரும் எதிர்பார்த்து ஏமாற்றிய 5 இயக்குனர்கள்.. காக்க வைத்து மோசம் பண்ண பிரம்மாண்ட ஷங்கர்
2023ல் ரிலீஸ் ஆகும் என நினைத்த ஐந்து இயக்குனர்களின் படங்களும் அடுத்த வருடம் தான் ரிலீஸ் ஆகிறது.
5 directors films released in 2024: ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அதற்கு காலமும் சூழலும் சரியாக அமையனும். அப்படி அமையாமல் போனால் அந்த செயலை செய்ய முடியாமலே போய்விடும். அப்படி தான் 2023ல் ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காக்க வைத்த ஐந்து இயக்குனர்களின் படங்கள் கடைசி வரை ரிலீஸ் ஆகாமலே போனது. அதிலும் சங்கர் நான்கு வருடங்களாக காக்க வைத்து மோசம் பண்ணி விட்டார். பாலா: பாலா இயக்கிய வணங்கான் படத்தில் முதலில் சூர்யா தான் நடித்தார். ஆனால் இந்த படத்தில் ஏகப்பட்ட கதை மாற்றத்தை பாலா ஏற்படுத்தியதால், இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்பு அந்த படத்தில் இருந்து விலகுவதாக சூர்யா அறிவித்தார். அதன் பின் பாலா, அருண் விஜயை கதாநாயகனாக வைத்து வணங்கான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை சூர்யா- பாலா இருவரிடமும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருந்திருந்தால், இந்த வருடத்திலேயே வணங்கான் படம் ரிலீஸ் ஆகியிருக்கும். ஆனால் இப்போது வணங்கான் படம் 2024ல் தான் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஏஆர் முருகதாஸ் : தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கி ஃபேமஸான இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு சமீபத்தில் சிவகார்த்திகேயனின் 23-வது படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் அந்தப் படத்தை 2024 ஜனவரி மாதத்தில் தான் துவங்கப் போவதாகவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.
