Vikram: நடிகர்கள் சிலர் தங்கள் இயல்பிலிருந்து மாரி வித்தியாசமான கெட்டப் போட்டு நடிக்க ஆசைப்படுவது உண்டு. இந்த கெட்டப்பிற்காகவே படம் ஓடும் என்று பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டும் இருப்பார்கள்.
கடைசியில் அவர்களுடைய உழைப்பிற்கு பலன் கிடைக்காமல் படம் படுதோல்வி அடைந்திருக்கும் அப்படிப்பட்ட ஆறு ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.
அடி மேல் அடி வாங்கும் விக்ரம்!
ஆர்யா: சாக்லேட் பாய் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த ஆர்யாவுக்கு வந்த ஆசைதான் நான் கடவுள் படம். இந்த படத்தில் அகோரி கேரக்டரில் நடித்ததோடு மட்டுமில்லாமல் தலைகீழாய் நின்றபடி யோகாசனம் செய்யும் வித்தையையும் கற்று தெரிந்திருந்தார்.
ஆனால் இந்த படம் பொருளாதார ரீதியாக படுத்து தோல்வி அடைந்ததோடு, ஆர்யாவின் உழைப்பை பற்றியும் யாரும் பெரிதாய் பேசவில்லை.
விஷால்: இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்திற்காக விஷால் ரொம்பவே மெனக்கெட்டு நடித்திருந்தார். பெண்களின் நளினத்தோடு நடித்தது மட்டும் இல்லாமல் இதில் மாறு கண் இருக்கும் கேரக்டர்.
இதற்காக படம் முழுக்க தன்னுடைய கண்ணை மாறு கண் போல் வைத்து நடித்தார். இதனால் விஷாலுக்கு கண்களின் நிறைய பாதிப்பு ஏற்பட்டதோடு பல வருடங்களுக்கு மாறு கண் இருப்பது போலவே அவருடைய முகத்தோற்றம் இருந்தது.
சமந்தா: சமந்தாவிற்கு வந்த விபரீத ஆசைதான் 10 எண்றதுக்குள்ள படம். இந்த படத்தில் சமந்தாவிற்கு வில்லி கேரக்டர் என்று சொல்லும் போதே சிரிப்பு வந்துவிடும்.
அதிலும் படத்தின் பிளாஷ்பேக் மற்றும் இறுதி கட்ட காட்சிகளில் சமந்தாவை வில்லியாக பார்ப்பதற்கு சகிக்காது.
ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் வித்தியாசமான கேரக்டரை நம்பி நடித்தார் என்பதை தாண்டி தொழில்நுட்பத்தை நம்பி மோசம் போனார் என்று தான் சொல்ல வேண்டும்.
கோச்சடையான் படம் முழுக்க அனிமேஷன் முறையில் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த கதை காலம் மக்களுக்கு புதிது என்பதால் படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.
விக்ரம்: கமலுக்குப் பிறகு சினிமாவை பரிசோதனையாக செய்து கொண்டிருப்பவர் தான் விக்ரம். நடிக்கும் அத்தனை படங்களிலும் வித்தியாசமான கேரக்டரில் நடிப்பதற்கே இவர் அதிகம் விரும்புவார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஒரே படத்தில் கிட்டத்தட்ட ஆறு மாத இடைவெளியில் 20 கிலோ குறைத்து நடித்திருப்பார்.
இது விக்ரம் செய்த மிகப்பெரிய பலப்பரீட்சை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அவருக்கு அது கை மேல் பலன் கொடுக்கவில்லை.