Actress Tamannah: படங்களில் பல கதாபாத்திரம் ஏற்று வெற்றி கண்ட ஹீரோயின்கள், ஒரு காலகட்டத்திற்கு பிறகு பட வாய்ப்புக்காக கவர்ச்சி நடிப்பினை மேற்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அதிலும் தன் இமேஜை பொருட்படுத்தாமல் அசத்தும் ஹீரோயின்களும் உண்டு.
படம் பார்க்க வருபவர்கள் இடையே அருவருப்பை ஏற்படுத்தும் அளவிற்கும், முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கும் இவர்களின் கவர்ச்சி நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார்கள். இது போன்ற படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மார்க்கெட்டை இழந்த 5 ஹீரோயின்களை பற்றி இங்கு காணலாம்.
அமலா பால் -சிந்து சமவெளி: 2010ல் சாமி இயக்கத்தில் திரில்லர் படமாய் எடுக்கப்பட்ட இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அமலாபால், கஜினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் தவறான உறவு கொள்ளும் சம்பந்தமான நடிப்பில் தத்துரூபமாக நடித்திருப்பார் அமலா பால். மேலும் இப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று படும் தோல்வியை சந்தித்தது.
சங்கீதா- உயிர்: 2006ல் சாமி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் அருந்ததி கதாபாத்திரத்தில் கவர்ச்சியான நடிப்பினை வெளி காட்டி இருப்பார் சங்கீதா. இக்கதாபாத்திரத்திற்கு பிறகு இவருக்கு சரிவர பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் சினிமாவில் இடைவெளி விட்டு காணப்பட்டார். தற்பொழுது வாரிசு படத்தில் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் சங்கீதா.
தமன்னா- லாஸ்ட் ஸ்டோரிஸ் 2: 2013ல் வெளிவந்த பாம்பே டாக்கீஸ் படத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் லாஸ்ட் ஸ்டோரீஸ். இப்படத்தின் பாகம் ஒன்று வெளிவந்து விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்பொழுது மில்க் பியூட்டி தமன்னா பாகம் இரண்டில் நடித்திருக்கிறார். இப்படத்தில் கவர்ச்சியை வெளிக்காட்டும் தவறான உறவு கொள்ளும் சம்பந்தமான கதாபாத்திரத்தில் நடித்து தன் ஹீரோயின் கேரியரை தொலைத்து வருகிறார் தமன்னா.
ஆண்ட்ரியா- அவள்: 2017ல் திகிலுட்டும் படமான இப்படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஆண்ட்ரியா இப்படத்தில் கவர்ச்சியான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். இருப்பினும் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. ஹிந்தி படத்தின் ரீமேக் ஆன இப்படம் தமிழில் வெற்றியை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷெரின்-துள்ளுவதோ இளமை: 2002ல் கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் துள்ளுவதோ இளமை. இப்படத்தில் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் தனுஷ் மற்றும் ஷெரின் நடித்திருப்பார்கள். இருவருக்கும் அறிமுக கதாபாத்திரம் என்பதால் கூடுதல் நடிப்பினை வெளி காட்டி இருப்பார்கள். மேலும் ஷெரினுக்கு இப்படம் அடுத்த கட்ட பட வாய்ப்பை பெற்று தந்தது.