ரிலீசுக்கு பின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்ட 5 படங்கள்.. விஜய் படத்திற்கு இப்படி ஒரு கிளைமாக்சா?

5 times when climax scenes changed after release: படத்தின் வெற்றியை தீர்மானிப்பது அதன் கிளைமாக்ஸ் காட்சிதான். படம் முழுக்க எல்லாமே சரியாக இருந்து, கிளைமாக்ஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றால் அந்த படம் கண்டிப்பாக தோல்வி படமாக முடிந்து விடும். எப்போதுமே ஒரு இயக்குனரால் ரசிகர்களின் பார்வையிலேயே யோசித்து விட முடியாது. சில நேரங்களில் இதுதான் சரியான முடிவாக இருக்கும் என இயக்குனர்கள் யோசித்து வைக்கும் கிளைமாக்ஸ், ரசிகர்களுக்கு திருப்தி இல்லாமல் போய்விடும். சில நேரங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் ரிலீஸ் செய்து 2,3 நாட்கள் கழித்து கூட கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

கிரீடம்: இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி, அஜித் நடிப்பில் பெரிய அளவில் வெற்றியைப் பெற்ற படம் கிரீடம். ஒரு சாதாரண கான்ஸ்டபிள் மகன் போலீசாக வேண்டும் என்பதை லட்சியமாக வைத்து சிறு வயதில் இருந்தே அதற்காக உழைத்து வருகிறார். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வன்முறையை கையில் எடுக்கும் நிலை ஏற்படுகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித் தண்டனை பெற்ற ஜெயிலுக்கு போவதோடு முடிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இது ரசிகர்களுக்கு திருப்தியை அளிக்காததால், சில வருட கடுங்காவல் தண்டனைக்கு பிறகு அஜித் மீண்டும் போலீஸ் ஆனது போல் காட்சி அமைக்கப்பட்டது.

பிரியமுடன்: விஜய்க்கு ஆரம்ப காலகட்டங்களில் காதல் படங்கள் தான் பெரிய அளவில் கை கொடுத்தது. இதில் பிரியமுடன் ஒரு வித்தியாசமான கதை. கதாநாயகியின் மேல் இருக்கும் அதீத காதலால் எந்த எல்லைக்கும் போகும் ஹீரோவாக விஜய் இதில் நடித்திருக்கிறார். தப்புக்கு மேல் தப்பு பண்ணி கதாநாயகியின் மனதில் இடம் பிடிக்கும் விஜய், காதலில் ஜெயித்து திருமணம் செய்து கொள்வது போல் முதலில் கிளைமாக்ஸ் இருந்தது. அதன் பின்னர் அவர் செய்த தவறுக்காக போலீஸ் அவரை சுட்டுக் கொல்வது போல் மாற்றப்பட்டது.

Also Read:ஒரு வழியா சென்னை வந்த கருஞ்சிறுத்தை..! அரசியல் என்ட்ரி விஜய்யை பார்க்க போகும் பாசமலர்

கல்லூரி: தர்மபுரியில் கல்லூரி மாணவிகள் பஸ்ஸில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் கல்லூரி. இந்த படத்தின் கிளைமாக்ஸ் முதலில் அந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு, கோர்ட் அவர்களை விடுவிப்பது போல் இருக்கும். இது ரசிகர்களுக்கு திருப்திகரமாக இல்லாததால் ரிலீஸ்சுக்கு பிறகு அந்த கோர்ட் காட்சியை அப்படியே கட் பண்ணி விட்டு, குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக ஃபிளாஷ்பாக் சீனில் சொல்வது போல் வைத்து விட்டார்கள்.

மின்சார கனவு: பிரபுதேவா, அரவிந்த்சாமி, கஜோல் நடிப்பில் வெளியான மின்சார கனவு படம் கிட்டத்தட்ட தோல்வி அடைந்திருக்க வேண்டிய படம். மின்சார கனவு ரிலீஸ் ஆகி ஒரு வாரம் வரை தியேட்டர் பக்கம் ஆளே கிடையாது. இதற்கு காரணம் படத்தின் முடிவில் கஜோல் கன்னியாஸ்திரி ஆக மாறி விடுவது போல் வைக்கப்பட்ட கிளைமாக்ஸ் தான். ஒரு வாரத்திற்கு பிறகு கஜோல் மற்றும் பிரபுதேவா திருமணம் செய்து கொள்வது போலவும், அரவிந்த்சாமி பாதிரியார் ஆகிவிடுவது போலவும் கிளைமாக்ஸ் மாற்றப்பட்ட பெண் படம் வேற லெவல் ஹிட் அடித்தது.

முகவரி: நடிகர் அஜித்குமாரின் கேரியரில் ரொம்பவும் முக்கியமான படம் முகவரி. குடும்பமா அல்லது தன்னுடைய லட்சியமா என்ற சிக்கலில் ஹீரோ மாட்டிக்கொண்டு தவிப்பது போல் படம் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு சராசரி குடும்பத்தைச் சேர்ந்த ஆண், தன்னுடைய கனவில் லட்சியமாக துடிக்கும் பொழுது அவர் சந்திக்கும் சோதனைகள் தான் படத்தின் கதை. இதில் ஜோதிகாவுக்கு வேறொருவருடன் திருமணம் ஆகி விடுவது போல் தான் கிளைமாக்ஸ் இருக்கும். ரிலீசுக்கு பிறகு அந்த காட்சியை கட் செய்து விட்டு, அஜித் மற்றும் ஜோதிகா இணைவது போல் காட்டி இருப்பார்கள்.

Also Read:விஜய் மகனை தூண்டி விட்ட ஷாலினி.. அரசியலில் தளபதிக்கு ஏற்படப்போகும் அவமானம்!