சினிமாவை பொறுத்த வரையிலும் ஹீரோக்களுக்கு என்று படங்களில் இண்ட்ரொடக்சன் சாங் ஆனது படு மாஸாக கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அதே அளவிற்கு நடிகைகளுக்கு என்று வரும்பொழுது அவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. ஆனால் 90ஸ் காலகட்டத்தில் வெளியான திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கு என்று மனதை வருடும் பாடல்கள் ஆக இண்ட்ரொடக்சன் சாங் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் காலங்கள் கடந்த பின்பும் இந்தப் பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறை இளசுகளின் ஃபேவரட் லிஸ்டில் ஒன்றாகவே இருந்து வருகிறது. அப்படியாக ஹீரோயின்களுக்காகவே கொடுக்கப்பட்ட 5 இண்ட்ரொடக்சன் பாடல்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
மேகம் கருக்குது: எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் குஷி. இதில் விஜய் உடன் ஜோதிகா இணைந்து நடித்திருப்பார். மேலும் இப்படத்திற்கு இன்னிசை தென்றல் தேவா இசை அமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் வரும் மேகம் கருக்குது என்னும் பாடல் ஜோதிகாவின் இண்ட்ரொடக்சன் பாடலாக அமைந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் இந்தப் பாடல் ஆனது ரசிகர்களை இன்றும் கூட மழையில் ஆட்டம் போட வைக்கும் பாடலாகவே இருந்து வருகிறது.
ஷாலாலா ஷாலலா: தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. இதில் விஜய் உடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் வரும் ஷாலாலா ஷாலலா ரெட்டைவால் வெண்ணிலா என்னும் பாடல் இந்தப் படத்தில் த்ரிஷாவின் அறிமுக பாடலாக அமைந்திருந்தது. மேலும் ரசிகர்களின் ஃபேவரட் பாடலாகவும் இருந்து வருகிறது.
பூப்பறிக்க நீயும் போகாதே: எம் ராஜா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சம்திங் சம்திங். இதில் ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் வரும் பூப்பறிக்க நீயும் போகாதே என்னும் பாடல் இந்தப் படத்தில் த்ரிஷாவின் அறிமுக பாடலாக அமைந்துள்ளது. அதிலும் இரண்டு பெண்களின் நடனமும் அனைவரது மனங்களையும் வருடக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது.
கொஞ்சும் மைனாக்களே: ராஜீவ் மேனன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இதில் அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் வரும் கொஞ்சும் மைனாக்களே என்னும் பாடல் ஐஸ்வர்யா ராயின் அறிமுக பாடலாக இப்படத்தில் அமைந்துள்ளது. அதிலும் இன்றைய ரசிகர்களையும் கூட இந்தப் பாடல் தனது இசையால் கட்டி போட்டுள்ளது என்றே சொல்லலாம்.
வெண்மேகம்: மணிரத்தினம் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குரு. இதில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் வரும் வெண்மேகம் முட்ட முட்ட பொன் மின்னல் வெட்ட வெட்ட என்னும் பாடல் ஐஸ்வர்யா ராயின் அறிமுக பாடலாக இப்படத்தில் அமைந்திருந்தது. மேலும் உலக அழகிக்காகவே எழுதப்பட்ட இந்தப் பாடல் ஆனது அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாடலாகவே இன்று வரையிலும் இருந்து வருகிறது.