ஏடாகூட காதலால் கேரியரை இழந்த 6 நடிகைகள்.. லட்சுமி மேனனை சுழற்றி அடித்த கர்மா!

Simran: தென்னிந்திய மக்களை பொறுத்த வரைக்கும் சினிமா வேறு சொந்த வாழ்க்கை வேறு என்று பார்ப்பவர்கள் கிடையாது.

உன் சொந்த வாழ்க்கையில் நீ எப்படி இருக்கிறாயோ அதை வைத்து தான் சினிமாவில் உன் வெற்றி என நிர்ணயிப்பவர்கள்.

அப்படிப்பட்ட சினிமாவில் நன்றாக வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஏற்பட்டால் ஏடாகூட காதலால் மொத்தமா கேரியரை இழந்த ஆறு நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

சிம்ரன்: நடிகை சிம்ரனை பொருத்தவரைக்கும் அப்பாஸ் மற்றும் பஜார் சுந்தரம் மாஸ்டருடன் காதல் வயப்பட்டு இருக்கிறார் என்ற வதந்திகள் வந்ததுண்டு.

அந்த வதந்திகள் எல்லாம் அவருடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய வித்திட்டது. ஆனால் நடிகர் கமலஹாசன் மற்றும் அவருடைய மனைவி சரிகாவின் விவாகரத்துக்கு சிம்ரன் தான் காரணம் என ஒரு செய்தி வந்தது.

இவர்களை பொதுவெளியில் பார்த்ததாக அப்போது நிறைய பத்திரிகைகள் செய்தி ஆக எழுதியது. அதில் தான் சிம்ரனின் மார்க்கெட் மொத்தமும் குலைந்து அவர் திருமணம் செய்து செட்டிலானது.

ஸ்ருதிஹாசன்; நடிகை ஸ்ருதிஹாசனுக்கு ஏழாம் அறிவு பட ரிலீசுக்கு பிறகு பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.

ஆனால் 3 படத்தின் ரிலீஸ் சமயத்தில் தனுஷ் உடன் இணைந்து அதிகமாகவே கிசுகிசுக்கப்பட்டார். அதன் பின்னர் ஸ்ருதிஹாசன் எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை.

தமன்னா: நடிகை தமன்னா வளந்து வரும் காலகட்டத்தில் கார்த்தியுடன் இணைந்து பையா மற்றும் சிறுத்தை படத்தில் நடித்தார்.

இந்த சமயத்தில் தமன்னா, கார்த்தியுடன் காதல் வயப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் வீட்டில் சம்மதிக்காததால் கார்த்தி உடனடியாக திருமணம் செய்து கொண்டார்.

அந்த சமயத்தில் தமன்னா தமிழ் சினிமாவில் இழந்த மார்க்கெட் இன்றுவரை அவருக்கு வாய்ப்பு பெரிதாக அமையவில்லை.

நக்மா: நடிகை நக்மா 90களில் காலகட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு படங்களில் பிசியாக இருந்தார்.

அந்த சமயத்தில் நடிகர் சரத்குமார் உடன் அவரை காதல் வயப்பட்டதாகும் அதனால் சரத்குமார் அவருடைய மனைவியை பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. இது நக்மாவின் சினிமா கேரியரையே காலி பண்ணியது.

அமலா: அமலா தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த குறுகிய காலகட்டத்திலேயே பல பிசியான நடிகைகள் ஓரம் கட்டப்பட்டார்கள்.

ஆனால் அதே சமயத்தில் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருந்த ரஜினியுடன் அமலாவுக்கு காதல் என வதந்திகள் வெளியானது. இதனால் அமலா தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலைமை வந்தது.

லட்சுமி மேனன்: நடிகை லட்சுமி மேனனின் கதை ரொம்பவே வித்தியாசமானது. நன்றாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் வதந்தியில் அதிகம் சிக்கினால் மார்க்கெட் உயரும் என தப்பு கணக்கு போட்டார்.

இதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி தான் விஷாலின் நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்தது.

கும்கி மற்றும் சுந்தரபாண்டியன் போன்ற படங்களின் மூலம் குடும்ப குத்து விளக்காக அங்கீகாரம் பெற்ற லட்சுமி மேனன் இந்த படத்தில் இறங்கி ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தார். இதன் விளைவு மொத்தமாய் மார்க்கெட் சரிந்தது தான்.