Nayanthara: நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு என்று வடிவேலு ஒரு காமெடியில் சொல்லுவார். அப்படி தான் நல்லா போய்கிட்டு இருந்த கேரியரில் புதுசா எதாவது முயற்சி பண்ணி மார்க்கெட்டை இழந்த நடிகைகள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட 6 நடிகைகளை பற்றி பார்க்கலாம்.
கேரியரை இழந்த 6 நடிகைகள்
அனுஷ்கா: தென்னிந்திய சினிமாவின் ராணியாக முடிசூடி இருந்த நேரத்தில் அனுஷ்காவுக்கு வந்த விபரீத ஆசை தான் இஞ்சி இடுப்பழகி.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களம், கதையும் நல்ல வரவேற்பை பெரும் என்று நம்பி கதைக்கேற்ப உடல் எடையை எக்கச்சக்கமாக ஏற்றினார்.
ஆனால் அனுஷ்காவால் இயற்கையான முறையில் தன்னுடைய பழைய உடல் எடையை பெற முடியவில்லை. அனுஷ்காவின் சினிமா கேரியரும் அஸ்தமனமானது.
அமலா பால்: அமலா பாலின் சொந்த வாழ்க்கை ஒரு பக்கம் அவருடைய சினிமா கேரியரை சரித்தாது என்றால், இன்னொரு பக்கம் ஏடாகூடமாக நடித்த படம்.
துணிச்சலான முயற்சி என்ற பெயரில் ஆடை படத்தில் நடித்து மொத்தமாய் சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.
கீர்த்தி சுரேஷ்: க்ரஷ் மெட்டீரியலாக சுற்றி கொண்டிருந்த கீர்த்தி சுரேசுக்கு பென்குயின் படம் தான் மொத்தமாக ஆப்பு வைத்தது.
அவருடைய உடல் அமைப்பு தான் அவருக்கு பெரிய பாசிட்டிவ் என்று தெரியாமல் எடையை குறைத்து தமிழ் சினிமாவில் பெரிய சரிவை சந்தித்தார்.
சினேகா: 90 களின் காலகட்டத்தில் சினேகா மாதிரி ஒரு குடும்ப குத்துவிளக்கை திருமணம் செய்ய இளைஞர்கள் ஏங்கி போய் கிடந்தார்கள்.
சினேகாவை என்ன சொல்லி புதுப்பேட்டை படத்தில் நடிக்க வைக்க சம்மதம் வாங்கினார்களோ தெரியவில்லை. அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு அவருடைய மார்க்கெட் ஆட்டம் கண்டது.
நயன்தாரா: நயன்தாராவின் மார்க்கெட் பலமுறை ஆட்டம் கண்டு மீண்டு வந்திருக்கிறது. அதில் சிவாஜி பட சமயத்தில் உடல் எடை குறைப்பு ஆபரேஷன் பண்ணி மார்க்கெட் இழந்தது முக்கியமான ஒன்று.
தடால் அடியாக குறைத்த உடல் எடை, எண்ணெய் வழியும் மேக்கப் என நயன்தாரா ஒரு பெரிய அக்கப்போர் செய்து முடித்தார்.
த்ரிஷா: புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதை தான் த்ரிஷாவுக்கு நடந்தது. நயன்தாரா மட்டும் தான் சோலோ ஹீரோயினாக நடிக்கணுமா, நானும் களம் இறங்குகிறேன் என முடிவெடுத்தார். சோலோ ஹீரோயினாக நடித்த நாயகி படமே அவருடைய மார்க்கெட்டை சரித்தது.