Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜா சினிமாவில் பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்ற கனவு உடனேயே தன்னுடைய வாழ்க்கையை முடித்திருக்கிறார்.
என்னதான் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும், இவருக்கு அடையாளமாக இவருடைய பாடல்கள் இருக்கின்றன.
நடிப்புத் துறை மனோஜ்க்கு சரியான ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும், இசை அமைப்பாளர்களின் கலைவண்ணத்தில் இந்த 6 பாடல்கள் மூலம் மனோஜ் நம் மனதில் எப்போதுமே நிலைத்திருப்பார்.
மனோஜின் மறக்க முடியாத 6 பாடல்கள்
திருப்பாச்சி அருவால: இன்றைய 2கே கிட்ஸ்கள் வரை கொண்டாடும் பாடல் தான் திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா.
வைரமுத்துவின் எழுத்து மற்றும் ஏ ஆர் ரகுமானின் இசை இந்தப் பாட்டின் பக்க பலம். மானம் தானே வேட்டி சட்டை மத்ததெல்லாம் வாழமட்ட மானம் காக்க வீரம் வேண்டுமடா என்ற பாடல் வரிக்கு மனோஜின் நடிப்பு பிரமிக்க வைத்திருக்கும்.
எங்கே அந்த வெண்ணிலா: சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பெரிய அளவில் ட்ரெண்டான பாடல் தான் எங்கே அந்த வெண்ணிலா.
வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் என்றாலும் இந்த பாடல் எப்பவுமே ஸ்பெஷல் தான்.
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வழியும் இல்லை அம்மா என்ற வரிக்கு வயதான இருவர் ஆடிய வீடியோ பெரிய அளவில் வைரலானது.
சொல்லாயோ சோலைக்கிளி: அல்லி அர்ஜுனா படத்திற்கு மிகப்பெரிய அடையாளமே அந்த படத்தில் பாடல்கள் தான்.
அதிலும் எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் வரலாறு வெளியான சொல்லாயோ சோலைக்கிளி பாடல் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்.
சொட்ட சொட்ட நனையுது: தாஜ்மஹால் படத்தில் குட்டி தாஜ்மஹாலை கையில் வைத்துக்கொண்டு மனோஜ் மழையில் ஆடுவது அவருடைய மரண செய்தி கேட்ட பிறகு 90s கிட்ஸ்களுக்கு கண்டிப்பாக ஞாபகம் வந்திருக்கும்.
நீ எங்கே என்று தொடங்கி அந்த பாடல் சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹால் என ஆரம்பிக்கும் பொழுது உச்சி குளிர்ந்து விடும்.
ஈச்சி எலுமிச்சி: முதல் படத்திலேயே ஏ ஆர் ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பு எல்லாம் கிடைக்க அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.
அந்த அதிர்ஷ்டசாலியில் ஒருவர் தான் மனோஜ். தாஜ்மஹால் படத்தில் வரும் ஈச்சி எலுமிச்சி பாடலை மனோ தான் பாடியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மச்சக் கண்ணி ஒன்னக் காங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே என்று பாடும் போது பயிற்சி பெற்ற பாடல் ஆசிரியர்களே தோற்றுப் போய் இருப்பார்கள்.
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்: வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் மற்றும் ஒரு சூப்பர் ஹிட் பாடல் தான் முதன்முதலாய் உன்னை பார்க்கிறேன்.
முழுக்க ஃபாரின் கெட்டபில் ஹீரோயின் மாடல் டிரஸ் போட்டு ஆடிக்கொண்டிருக்க கட்டம் போட்ட சட்டை, வேஷ்டி என துவம்சம் பண்ணி இருப்பார் மனோஜ்.