மனதை லேசாக்க உதவும் 6 பீல் குட் படங்கள்.. அட்ராசிட்டி பண்ணி ஜெயித்த டூரிஸ்ட் பேமிலி!

Tourist family: ஒரு படம் தொடங்கி கடைசியில் முடியும் வரை புன்முறுவலுடன் பார்க்க முடிந்தால் கண்டிப்பாக அந்த படம் நம் மனதில் நிலைத்து நின்று விடும்.

மேலும் அந்த படத்தின் தாக்கம் ஒன்று இரண்டு நாட்களுக்கு நம் மனதை விட்டு நீங்காது. அப்படிப்பட்ட படங்களை தான் பீல் குட் படங்கள் என்று சொல்வதுண்டு.

சமீபத்தில் அந்த மாதிரி கதை அம்சத்துடன் ரிலீஸ் ஆன ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

லப்பர் பந்து: இரண்டு இரண்டு தலைமுறைகளுக்கு இடையே இருக்கும் ஈகோவை தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் வைத்து ரப்பர் வந்து படத்தில் சிறப்பாக சொல்லி இருப்பார் இயக்குனர் தமிழரசன் பச்சை முத்து.

இந்த படத்தில் இருக்கும் ஒவ்வொரு கேரக்டரும், அந்த கேரக்டர் சுமந்திருக்கும் கதையும் பாராட்டுதலுக்குரியது. இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இருக்கிறது.

மெய்யழகன்: சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வசிப்பவர்களுக்குத்தான் இந்த படத்தின் அருமை தெரியும்.

சொந்த ஊருக்கே விருந்தாளியாய் போகும் நிலைமையில் அரவிந்த் சாமியும், அங்கே அவரை அரவணைக்க கார்த்தியும் என படம் கண்ணீரை வரவழைத்து விடும்.

படத்தின் முடிவில் கார்த்தி யார் என தெரிந்து கொண்டு பார்க்க அரவிந்த்சாமி ஓடோடி செல்வது படத்தின் கனத்தை கூட்டிவிடும். இந்த படம் தற்போது நெட் பிலிக்ஸ் தளத்தில் இருக்கிறது.

குடும்பஸ்தன்: எதார்த்த நாயகன் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்ற படம் குடும்பஸ்தன்.

மணிகண்டனுக்கு அப்பா அம்மாவாக நடித்த கேரக்டர்களாக இருக்கட்டும், மணிகண்டனின் அக்கா கணவராக வருபவராக இருக்கட்டும் இயல்பாக ஒரு குடும்பம் எப்படி இருக்குமோ அதை அப்படியே கண்முன் காட்டி இருப்பார்கள்.

ஒரு ஆணின் பொருளாதார நிலை அவனுடைய குடும்பத்தில் அவனை என்னவாக காட்டுகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிய இந்த படம் ஜி5 ஓடிடி தளத்தில் இருக்கிறது.

டூரிஸ்ட் பேமிலி: சமீபத்தில் ரிலீஸ் ஆகி தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

இந்தப் படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பரிமாணம் என்று கூட சொல்லலாம். மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை கொண்டிருக்கும் இந்த படம் வரும் 31ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் இல் ரிலீஸ் ஆக இருக்கிறது.

குருவாயூர் அம்பல நடையில்: பிரித்விராஜ் ஃபாசில் ஜோசப் கூட்டணியில், சிலாகிக்க வைத்த படம் தான் குருவாயூர் அம்பல நடையில்.

20 வருடங்களுக்கு முன்பு வந்த அழகிய லைலா பாடலை மீண்டும் வைரல் ஆக்கியது இந்த படம்.

தன் மனைவியின் முன்னால் காதலன் தான் தன்னுடைய தங்கையின் கணவனாக வரப்போகிறவன் என்று தெரிந்து கொள்ளும் ஆண் என்ன மாதிரி முடிவு எடுக்கிறான் என்பதுதான் இந்த படத்தின் கதை.

இதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் எதார்த்த காமெடியுடன் சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் இல் பார்க்கலாம்.

சூக்‌ஷமதர்ஷினி: நஸ்ரியா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத்தில் என்ட்ரி கொடுத்த படம் தான் சூக்‌ஷமதர்ஷினி.

பெண்களின் சிலருக்கு எதையும் மைக்ரோஸ்கோப் போல நுண்ணோக்கி பார்க்கும் கேட்கும் திறன் உண்டு. அப்படி அக்கம் பக்கத்து வீட்டில் நடப்பது உற்று நோக்கும் பெண்ணாக நஸ்ரியா நடித்திருப்பார்.

இந்த படத்தை பொறுத்த வரைக்கும் நஸ்ரியா மற்றும் பாசில் ஜோசப் இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு தங்களுடைய நடிப்பு திறமையை காட்டி இருப்பார்கள்.

மிஸ்டரி திரில்லர் என்ற கவனமே இல்லாமல் படத்தை தென்றல் போல எடுத்து கவிதை போல் முடித்து இருப்பார் இயக்குனர் இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் இருக்கிறது.