தில்லான கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி கண்ட லக்ஷ்மியின் 5 படங்கள்.. விசில் அடித்து கொண்டாடிய தாய்மார்கள்

இன்றைய நடிகைகளை ஒப்பிடும் போது 70ஸ், 80ஸ் களில் நடித்த நடிகைகள் ஹீரோக்களுக்கு சமமாக கதையில் காட்டப்பட்டனர். அவர்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சினிமா ரசிகர்களிடையே பெயர் வாங்கினார். இதில் முக்கியமானவர் நடிகை லட்சுமி. 70ஸ் களில் இளம் கதாநாயகியாக இருந்த இவர் 80ஸ் காலத்தில் முக்கியமான நிறைய கேரக்டரில் நடித்தார்.

சம்சாரம் அது மின்சாரம்: இயக்குனர் மற்றும் நடிகர் விசுவின் படங்களில் எப்பொழுதுமே பெண்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். இவரது இயக்கத்தில் வெளியான சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தின் மொத்த கதைக்கும் மையப்புள்ளியான கேரக்டர் லட்சுமியுடையது தான். சொல்லப்போனால் லட்சுமி தான் அந்த படத்தின் ஹீரோ.

பாசப்பறவைகள்: மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் 1988 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற திரைப்படம் பாசப்பறவைகள். இந்த படத்தில் லட்சுமி, ராதிகா, மோகன், சிவகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் நீதிமன்ற காட்சிகளில் நடிகை லட்சுமியும், ராதிகாவும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்திருந்தனர்.

குடும்பம் ஒரு கோயில்: நடிகர் திலகம் சிவாஜி, லட்சுமி, முரளி,ரஞ்சனி ஆகியோர் நடித்த திரைப்படம் குடும்பம் ஒரு கோயில். இந்த படத்தில் நடிகை லட்சுமி, சிவாஜியின் மனைவியாக நடித்திருந்தார். குடும்ப பின்னணி கொண்ட இந்த திரைப்படத்தில் சென்டிமென்ட் காட்சிகளில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

ஜீன்ஸ்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிகை லட்சுமி, ஐஸ்வர்யா ராயின் பாட்டியாக நடித்திருந்தார். தன்னுடைய பேத்தியின் காதலுக்காக பொய் சொல்லும் காட்சியிலும், அந்த பொய்யை காப்பாற்ற போராடும் காட்சியிலும் நடிகை லட்சுமி நடிப்பில் கலக்கி இருப்பார். இந்த படம் மக்களிடையே வரவேற்பை பெற லட்சுமியும் முக்கிய காரணம்.

படையப்பா: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்த திரைப்படம் படையப்பா. இந்த படத்தில் லட்சுமி சிவாஜியின் மனைவியாக நடித்திருப்பார். சிவாஜியின் மறைவிற்கு பிறகு அவருடைய அண்ணனான ராதாரவியை இவர் எதிர்த்து பேசும் காட்சிகளில் தன்னுடைய தைரியமான நடிப்பை காட்டியிருந்தார்.