நடிகைகள் தங்களுக்கு மார்க்கெட் குறையும் போதெல்லாம் ஏதாவது ஒரு புதிய பிளானில் விட்ட வாய்ப்பை பிடிக்க முயற்சி செய்வார்கள். சில நடிகைகளுக்கு அது கை கொடுக்கும். சிலருக்கு ஒர்கவுட் ஆகாமல் போய்விடும். கவர்ச்சியான போட்டோஷூட்களை வெளியிடுவது என்பதும் இப்போது ட்ரெண்ட் ஆகி விட்டது. அது ரசிக்கும்படி அமையாமல் ரசிகர்களே வெறுக்கும் அளவிற்கும் போய்விடுகிறது.
கிரண்: நடிகை கிரண் தமிழில் ஜெமினி, வின்னர் போன்ற படங்களின் மூலமாக பிரபலமானார். அதன் பின்னர் ஒரு பாடலுக்கு மட்டும் வருவது, சிறப்பு தோற்றத்தில் வருவது என இருந்தார். இப்போது அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லை. இன்ஸ்ட்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் கிரண் பாலோவர்ஸை அதிகரிக்க படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
ரைசா: ரைசா விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 1 மூலம் மக்களிடையே அறிமுகமானவர். பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததுமே ரைசா நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு எந்த படவாய்ப்புகளும் அமையாததால் ரைசா கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்து விட்டார்.
ரம்யா பாண்டியன்: நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாததால் திடீரென்று ஒரு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தினார். அதன் மூலம் குக் வித் கோமாளி, பிக் பாஸ் வாய்ப்புகள் கிடைத்தாலும், சினிமா வாய்ப்புகள் இல்லாததால் முன்பை விட மோசமாக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
எமி ஜாக்சன்: எமி ஜாக்சன் மதராசபட்டினம் திரைப்படம் மூலம் இந்திய சினிமாவிற்குள் வந்த லண்டன் அழகி. லிவிங் டூ கெதர், குழந்தை, காதலனுடனான பிரேக்கப்பிற்கு பிறகு பட வாய்ப்பில்லாத எமி ஜாக்சன் இப்போது கவர்ச்சியில் இறங்கி விட்டார்.
யாஷிகா ஆனந்த்: கோலிவுடை பொறுத்தவரை யாஷிகா ஆனந்த் என்றாலே கவர்ச்சி தான். அவர் உடைகள் மட்டும் இல்லாமல் தேர்ந்தெடுக்கும் படங்களும் முகம் சுளிக்கும் படி தான் இருக்கும். யாஷிகா அடிக்கடி படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அமலா பால்: அமலா பால் ஹோம்லியான நடிகையாக கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் தான். பல ஹிட் படங்களில் நடித்த அமலாபாலுக்கு ஏ.எல் விஜயுடனான விவாகரத்திற்கு பிறகு அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லை. ஆடை படத்தில்ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்த பின் அமலாவின் மார்க்கெட் மொத்தமாக காலியானது. இருந்தாலும் அமலா பால் விட்டதை பிடிக்க ஓடிக்கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் இவர் பதிவிட்ட பீச் போட்டோஷூட் பயங்கர கவர்ச்சியாக இருந்தது. இந்த பதிவிற்கு நிறைய நெகட்டிவ் கமாண்ட்ஸும் வந்தது.