எம்ஜிஆருக்கே விபூதி அடித்த தயாரிப்பாளர்.. ஒரே படத்தோடு சோலிய முடிச்சு விட்ட புரட்சித்தலைவர்

மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ என்பதையும் தாண்டி தமிழ் சினிமாவை வளர்த்தவர் என்ற பங்கும் இவருக்கு உண்டு. எம்ஜிஆர் நல்ல நிலமைக்கு வந்தவர்கள் தமிழ் சினிமாவில் நிறைய பேர் உண்டு. அவர் இருந்து 25 ஆண்டுகள் மேலே ஆகியும் அவரின் பெயர் இன்றும் அவரால் உதவி பெற்றவர்களால் நிலைத்து நிற்கிறது.

சினிமா ஆரம்பித்த காலத்தில் படங்கள் கருப்பு வெள்ளையில்தான் உருவாகின. அதன் பின்னர் கோவா கலர், ஈஸ்ட் மேன் கலர். போன்ற கலர் படங்கள் வெளிவர ஆரம்பித்தன. அதைத் தாண்டி வெளியான முதல் கலர் படத்தில் நடித்தவர் என்ற பெருமை மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு தான் உண்டு.

எம்ஜிஆர் எந்த அளவுக்கு உதவிக்கரம் நீட்டுகிறாரோ, அதே அளவுக்கு அவர் ஈகோவை யாராவது சீண்டி பார்த்தால் தன்னுடைய மற்றொரு இரக்கமில்லாத முகத்தையும் காட்ட தயங்கியதே இல்லை. எம்ஜிஆரின் கோபத்தால் சினிமாவில் அடி வாங்கியவர்களும் நிறைய பேர் உண்டு.

அப்படி எம்ஜிஆரின் கோபத்தில் சிக்கியவர்தான் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தரம். மாடர்ன் தியேட்டர்ஸ் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல் படங்களை தயாரித்து வெளியிட்டு வந்த நிறுவனம். இதன் உரிமையாளர் சுந்தரம் ரொம்பவும் கரார் பேர்வழி. நடிகர்கள் கால்ஷீட் கொடுத்து விட்டால் அந்த நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்பதில் ரொம்பவும் கண்டிப்பாக இருப்பார்.

அந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் கீழ் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த முதல் கலர் திரைப்படம் தான் அலிபாபாவும் 40 திருடர்களும். இந்தப் படம் மேஜிக் நிறைந்த கதையாக எடுக்கப்பட்டிருக்கும். இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தாலும், இதுதான் எம்ஜிஆர் அந்த நிறுவனத்திற்கு பணிபுரிந்த முதல் மற்றும் கடைசி திரைப்படம் ஆகும்.

இதற்கு காரணம் இந்த படம் எடுக்கும் பொழுது எம்ஜிஆர் கொஞ்சம் பிஸியாக இருந்திருக்கிறார். படப்பிடிப்புக்கு சரியாக வராததால் ஒரு பாடல் காட்சியை டூப்பை வைத்து எடுத்து இருக்கிறார் சுந்தரம். அந்தக் காட்சியை எம்ஜிஆருக்கு போட்டு காட்டிய போது, எம்ஜிஆருக்கு ரொம்பவே கஷ்டமாக போய்விட்டது. அதோடு தான் அந்த நிறுவனத்திடம் வேறு எந்த படமும் பண்ணாமல் ஒதுங்கிக் கொண்டாராம்.