GV Prakash: இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆன ஜிவி பிரகாஷ் ஆறு வயதிலிருந்தே பின்னணி பாடகராக இருக்கிறார்.
ஏ ஆர் ரகுமான் இசை அமைத்த படங்களில் சிக்கு புக்கு ரயிலே, குளுவாளிலே முத்து வந்தல்லோ, ஷாக் அடிக்குது சோனா, மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன் போன்ற பாடல்களை பாடி இருக்கிறார்.
ஜிவி பிரகாஷின் குரலுக்கு எப்போதுமே தனித்துவம் உண்டு. அதிலும் அவர் சைந்தவி உடன் பாடிய பாடல்களுக்கு தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
நல்ல ஒரு மனநிலையை உருவாக்க ஜிவி பிரகாஷ் பாடிய இந்த ஆறு பாடல்கள் கண்டிப்பாக உதவும். அது என்னென்ன பாடல்கள் என்று பார்க்கலாம்.
6 பீல் குட் பாடல்கள்
யாத்தே யாத்தே: ஆடுகளம் படம் ஜிவி பிரகாஷின் சினிமா கேரியரில் நிறைய விருதுகளை அள்ளி குவித்தது. இதில் இவர் பாடிய யாத்தே யாத்தே பாடல் தான் அடுத்தடுத்து இவருக்கு பின்னணி பாடகர் ஆக வாய்ப்புகள் வர காரணமாக அமைந்தது.
வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா இல்ல வேலைக்கே காட்டாம வளர்த்தாங்களா என்ற வரிகள் உடன் தொடங்கும் இந்த பாடல் ஒரு காலகட்டத்தில் பெரிய அளவில் வைரல் ஆகியது.
பிறை தேடும் இரவிலே: ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் கெமிஸ்ட்ரியின் உருவான பிறை தேடும் இரவிலே பாடல் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரிட்.
செல்வ ராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருக்கிறது. என் ஆயுள் ரேகை நீயடி, என் வாழ்வின் வேரடி என ஜிவி பிரகாஷ் பாட ஆரம்பிக்கும் போதே மனம் சிலாகித்து விடும்.
பற பற பறவை ஒன்று: விஷ்ணு விஷால் மற்றும் சுனைனா நடிப்பில் வெளியான நீர்ப்பறவை படத்தின் பாடல்கள் அத்தனையுமே சூப்பர் ஹிட்.
அதிலும் பற பற பறவை ஒன்று ஒன்று என்ற பாடலை ஜிவி பிரகாஷ் ஒரு டோனிலும், ஸ்ரேயா கோஷல் மற்றொரு டோனிலும் பாடி இருப்பார்.
அதிலும் மங்கை என் குரல் கேளடி நான் மதுவில் கிடக்கிற ஈயடி என்று வரும் வரிகளை பாடும்போது ஒருதலை காதலில் உருகி இருப்பார் ஜி வி பிரகாஷ்.
யார் இந்த சாலையோரம்: தலைவா படத்தில் விஜய் மற்றும் அமலா பாலுக்கு யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது என்ற டூயட் பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடி இருப்பார்கள். இந்த கெமிஸ்ட்ரியில் ரசிகர்கள் அதிகம் விரும்பி கேட்கும் பாடலில் இதுவும் ஒன்று.
பொல்லாத பூமி: ஜிவி பிரகாஷின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்த படம் தான் அசுரன். இந்த படத்தில் தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் கெமிஸ்ட்ரியில் உருவான பாடல் தான் பொல்லாத பூமி.
இந்த படம் ரிலீஸ் ஆன போது இந்த பாடல் பெற்ற வரவேற்பை விட சமீபத்தில் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.