நடிகை மற்றும் மாடல் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டோ சூட்கள் நடத்தி வருகிறார். தற்போதைக்கு அவருக்கு எந்த படவாய்ப்புகளும் அமையவில்லை. இருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் ரம்யா பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார். இவர் முதலில் ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். அதன் பிறகு ஆண் தேவதை படத்தில் நடித்தார்.
இருந்தாலும் ரம்யாவுக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் அமையவில்லை. ரம்யா பாண்டியன் என்ற நடிகை இருந்ததையே மறந்திருந்தனர். அப்போது தான் இவர் திடீரென்று மொட்டை மாடியில் போட்டோ சூட் பண்ணி புகைப்படங்களை வெளியிட்டார்.
இந்த புகைப்படத்திற்கு பிறகு ரம்யா பாண்டியன் ரசிகர்களால் அதிக கவனம் பெற்றார். சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனார். அந்த வைரல் புகைப்படம் தான் ரம்யா பாண்டியனை குக் வித் கோமாளி வரை கொண்டு வந்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அதிக புகழ் பெற்ற ரம்யா பாண்டியன் பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்டார். இதன் மூலம் அவரின் மீது பல நெகடிவ் விமர்சனங்கள் தான் வந்தது. வெளியில் வந்த பிறகு அவருக்கு பட வாய்ப்புகளும் அமையவில்லை.
இந்த நிலையில் ரம்யா பாண்டியன் படு கிளாமரான போஸ் கொண்ட போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். கருப்பு நிற உடையில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டியிருக்கிறார். பட வாய்ப்புக்காக ரம்யா இப்படி கேவலமாக நடந்து கொள்கிறார் என ரசிகர்கள் நெகடிவ் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
