6 பெரும் முதலைகளை ஓரங்கட்டிய பிரதீப் ரங்கநாதன்.. முதல் பந்திலேயே அடித்த இமாலய சிக்சர்

சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலம் ஓவர் நைட்டில் டாப்பில் வந்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு இன்றைய நவீன காதலை கொஞ்சம் கூட விட்டு வைக்காமல் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் பிரதீப். இந்த படம் ரிலீஸ் ஆனதில் இருந்தே இளைஞர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளம் பக்கம் போனாலே லவ் டுடே திரைப்படத்தை பற்றி தான் பேச்சு.

பிரதீப் லவ் டுடே திரைப்படத்திற்கு முன் 2019 ஆம் ஆண்டு கோமாளி திரைப்படத்தை இயக்கியிருந்தார். வேல்ஸ் இன்டர்நேஷனல் மூவிஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மெகா ஹிட் அடித்தது. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 50 கோடி வசூலித்தது.

Also Read: ஓவர் நைட்டில் பிரபலமான லவ் டுடே பிரதீப்.. மேடையில் உச்சகட்ட டென்ஷன் ஆன உதயநிதி!

கோமாளி வெற்றியை தொடர்ந்து தான் லவ் டுடே படத்தை எடுத்திருக்கிறார். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரிலீஸ் ஆகி, ஸ்லோ பிக்கப்பில் தொடங்கி இப்போது டாப்பில் இருக்கிறது இந்த படம். இந்த படத்தை பிரதீப் இயக்கியதோடு அவரே ஹீரோவாகவும் நடித்தது தான் படத்தின் பெரிய பிளஸ். இவரை தவிர வேறு யாரையும் அந்த கேரக்டரில் வைத்து பார்க்க முடியவில்லை.

பொதுவாக இயக்குனர்கள் ஹீரோக்கள், வில்லனாக, காமெடியன்கள் ஆக நடிப்பது ஒன்றும் புதிதில்லை. ஹீரோக்களுக்கு பின் கைகட்டி கொண்டு சுற்றுவதை விட நாமே நடித்து விடலாம் என இறங்கி நடித்த இயக்குனர்கள் பலபேர் உண்டு. ஆண்பாவம் படத்தில் பாண்டியராஜன், புதிய பாதையில் பார்த்திபன், முந்தானை முடிச்சில் பாக்யராஜ் தலைநகரம் படத்தில் சுந்தர் சி மற்றும் கமல், அர்ஜுன், ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவை தான் பிரதீப் எடுத்திருக்கிறார்.

Also Read: சின்ன பையனு அசால்ட்டா நெனச்சது தப்பா போச்சே.! அக்கட தேசத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்த லவ் டுடே

கோலிவுட்டில் நீண்ட வருடங்களாகவே இயக்குனர்கள் ஹீரோக்களாக நடிப்பது இல்லாமல் இருந்தது. தமிழ் சினிமாவில் அந்த இடம் வெற்றிடமாகவே இருந்தது. சுந்தர் சி கடைசியாக இருள், முத்தின கத்திரிக்கா திரைப்படங்களில் நடித்தார். முத்தின கத்திரிக்கா ரிலீஸ் ஆகி 6 வருடங்கள் மேலாகி விட்டது. இப்போது இவர்கள் விட்டு சென்ற இடத்தை பிரதீப் நிரப்பி விட்டார்.

அதுவும் ஏனோ தானோ என்று ஒரு படம் நடிக்காமல் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து விட்டார். டாப் ஹீரோக்கள் எல்லாம் இவர் கதைக்காக ஏங்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். தமிழ் ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகிறார்கள். 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 30 கோடி வசூல் செய்திருக்கிறது.

Also Read: காந்தாரா படத்தைக் காப்பியடித்த லவ் டுடே.. அக்கட தேசத்திலும் டஃப் கொடுக்கும் பிரதீப் ரங்கநாதன்