பழைய படங்களின் டைட்டிலாய் எடுத்து புதிய படத்திற்கு மீண்டும் வைப்பது இப்போதெல்லாம் அதிகமாக நடந்து வருகிறது என்றே சொல்லலாம். சிலர் பிரச்சனை வர கூடாது என்பதற்காக எந்த புது டைட்டிலையும் வைப்பது இல்லை. சிலர் நல்ல ராசியாக எண்ணி ஏதாவது பழைய டைட்டிலை செலக்ட் பண்ணி வைக்கிறார்கள்.
இந்த வழியில் அதிகமாக பயணித்தது தனுஷ் என்று சொல்லலாம். பொல்லாதவன், படிக்காதவன், உத்தமபுத்திரன், மாப்பிள்ளை , தங்க மகன் என அதிகமாக பழைய படங்களின் டைட்டிலை தன்னுடைய படத்திற்கு வைத்திருக்கிறார். இதில் பெரும்பாலும் அனைத்தும் ரஜினியின் படங்களே.
தனுஷை தொடர்ந்து சிவகார்திகேயனும் ரஜினியின் படங்களான வேலைக்காரன், மாவீரன் டைட்டில்களை எடுத்திருக்கிறார். அதற்க்கு முன்பாகவே தனுஷின் தயாரிப்பில் நடிக்கும் போது எதிர் நீச்சல் என்னும் பழைய படத்தின் டைட்டிலை எடுத்து நடித்திருக்கிறார்.
தற்போது மைனா பட கதாநாயகன் விதார்த் நடிக்கும் புது படத்தின் படக்குழு MGR படமான குடியிருந்த கோவில் படத்தின் டைட்டிலை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். குடியிருந்த கோவில் 1968 ஆம் ஆண்டு MGR மற்றும் ஜெயலலிதா நடிப்பில் வெளியான படம் ஆகும்.
பொதுவாக ரஜினியின் பட டைட்டில்கள் தான் அதிகமாக உபயோக்கிக்கப்பட்டு வருகிறது. ஆடு புலி ஆட்டம், நினைத்தாலே இனிக்கும் , பில்லா, காளி , முரட்டு காளை , கழுகு, தில்லு முல்லு, நான் மகான் அல்ல, மனிதன், தர்ம துரை என ரஜினியின் பல படங்கள் இரண்டாம் முறை டைட்டிலாக வந்துவிட்டன.
சமீபத்தில் வெளியான கமலின் படமான விக்ரம் கூட அவரின் 1986ஆம் வெளியான படத்தின் டைட்டிலேயே வைத்து கொண்டார். சிவாஜியின் படங்களின் பெயர்கள் கூட அவ்வப்போது மீண்டும் டைட்டிலாக வருகிறது. ரஜினி பட டைட்டிலை பயன்படுத்தி வந்த படக்குழுவினர் தற்போது எம்ஜிஆர் பக்கம் திரும்பியுள்ளனர்.