ஒரே அட்டெம்ப்ட்.. மக்களை வியக்க வைத்த 9 படங்கள்

தமிழ் சினிமா, தனித்துவமான முயற்சிகளுக்காக அழகாக பெயர் பெற்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும், சில படங்கள் விதிகளை மீறி புதுமைகளை தேடின. அந்த வகையில், தமிழ் திரை உலகத்தில் “முதல் முயற்சியில்” நடந்த சில படைப்புகள் இங்கே

1987ஆம் ஆண்டு வெளியான “பேசும் படம்” இந்திய சினிமாவின் வரலாற்றில் முக்கியமான தமிழ் படமாகும். கமல்ஹாசன் நடித்த இப்படம் வசனம் இல்லாமல் காட்சிகளின் மூலம் கதையை சொல்லும் விதத்தில் உருவான ஒன்று. இந்த படம் ஹிந்தியில் “Pushpak” என்றும், மற்ற மொழிகளில் வேறுபட்ட தலைப்புகளில் வெளியானது.

அந்த நாள் 1954 ல் சிவாஜி நடிப்பில் வெளிவந்த இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கிய மைல்கல். பாடல், நடனம், சண்டை காட்சிகள் எதுவுமின்றி வெளியான முதல் திரைப்படம். இரண்டாம் உலகப் போர் பின்னணியில் ஒரு வானொலிப் பொறியாளர் கொல்லப்படுவதை மையமாகக் கொண்ட திரில்லர் படம்.

சுயம்வரம் படைத்த கின்னஸ் சாதனை

2017 ல் வெளிவந்த தாயம் படம், சந்தோஷ் பிரதாப் நடிப்பில், ஒரே அறையில் முழுப்படமும் எடுக்கப்பட்ட முதல் இந்திய படம் என்ற சாதனை பெற்றது. இயக்குநர் கண்ணன் ரங்கசாமியின் இந்த முயற்சி, சிறிய இடத்தில் மிகப் பெரிய கதையை சொல்ல முடியும் என்பதற்கான அழுத்தமான எடுத்துக்காட்டு. நேர்த்தியான ஒளிப்பதிவும், களமாக அமைந்த அறையும் கவனிக்கத் தக்கவை.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படம் ரா.பார்த்திபன் இயக்கிய ஒரு தமிழ் படம் ஆகும். இது 2014 ஆம் ஆண்டு வெளியானது. கதையே இல்லாத படம் என்ற கருத்தை மையமாகக் கொண்டது. இப்படத்தில், திரைப்படத் துறையில் நுழைவதற்கான ஒருவரின் முதல் முயற்சிகள் மற்றும் அதில் உள்ள சவால்கள் பற்றிய கதை சொல்லப்பட்டுள்ளது.

சுயம்வரம் 1999 ல் 23 மணி நேரம் 58 நிமிடத்தில் முடிக்கப்பட்ட அதிவேக தமிழ்படமாகும். 14 இயக்குநர்களும் 25 முன்னணி நடிகர்களும் சேர்ந்து உருவாக்கிய இந்த படம் கின்னஸ் சாதனை பெற்றது. ஒரே திரைப்படத்தில் அதிக முன்னணி நடிகர்கள் நடித்தார்கள் என்ற சாதனையையும் இந்த பெற்றது.

2006 ல் வெளிவந்த இருவர் மட்டும் படம் இரு முக்கிய கதாப்பாத்திரங்களைக் கொண்ட தனித்துவமான தமிழ் திரைப்படம். துவாரகி ராகவனின் முதல் இயக்கப் படைப்பு இது. அப்பெயர் தமிழில் இல்லாததால், By 2 என இருந்த தலைப்பு “இருவர்மட்டும்” என மாற்றப்பட்டது. நீண்ட வருடங்களுக்கு பின் பார்த்திபன் அவர்கள் ஒருவரை மட்டுமே வைத்து எடுத்த படம் “ஒத்த செருப்பு”

இரவின் நிழல் 2022 ல் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் சினிமாவின் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் ஆகும். எவ்விதம் நிறுத்தமின்றி, ஒரு கேமரா ஷாட்டில் ஒரு தொடர்ச்சியான காட்சியாக படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்படம் 2010ல் சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ் சினிமாவின் முதல் Spoof Movie ஆகும். பல படங்களின் கிளிஷே காட்சிகளை விமர்சித்து கலாய்த்த ஒரு நகைச்சுவை சினிமா இது.