சரத்குமார் ஆரம்ப காலங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். பின்பு அவர் உடற்கட்டமைப்பு அவருக்கு வில்லன் வாய்ப்பை கொடுத்தது. இன்று ஒரு உச்ச நடிகராகவும், அரசியல் கட்சி தலைவராகவும் இருக்கும் சரத்குமார் எந்தவித ஈகோவும் இன்றி எனக்கு வாழ்வளித்தவர் என தன்னுடைய சமகால நடிகர் ஒருவரை கூறியிருக்கிறார்.
சரத்குமார் நாட்டாமை, மூவேந்தர், சிம்மராசி, சூர்யவம்சம், பாட்டாளி போன்ற கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றவர். அதிலும் நாட்டாமை அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் சரத்குமாரை சினிமா உலகிற்கு அடையாளப்படுத்தியது ‘புலன் விசாரணை’ திரைப்படம் தான்.
RK செல்வமணி இயக்கத்தில், ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த நடிப்பில் உருவான திரைப்படம் ‘புலன் விசாரணை’. அன்றைய பிரபலமான ரவுடி ஆட்டோசங்கர் கதையை பின்புலமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இதில் சரத்குமாரோடு சேர்ந்து ஆனந்த்ராஜ், ராதாரவியும் நடித்திருந்தனர்.
அனந்தராஜும், ராதாரவியும் அப்போது பிரபலமான வில்லன்கள். ஆனால் சரத்குமார் அப்போது தான் ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தார். இந்த படத்திலும் இறுதி காட்சியில் தான் வருவார். அவருடைய ஆகஜுபாவமான உடலுக்கு விஜயகாந்த் உடன் நேருக்கு நேர் நின்று சண்டை போட்டது தான் அவரை பிரபலமாக்கியது.
விஜயகாந்த் அவரை அடிக்கும்படி சரத்குமாரிடம் கூறியிருக்கிறார். ஆனால் சரத் விஜயகாந்த் மீது இருந்த மரியாதை காரணமாக விஜயகாந்தை அடிக்க தயங்கினாராம். அவரை சமாதானப்படுத்திய கேப்டன் வில்லனிடம் அடிவாங்கி பின்பு நான் அடித்தால் தான் காட்சி நன்றாக இருக்கும் என்று கூறி நடிக்க வைத்தாராம்.
பொதுவாக நடிகர்கள் எந்த ஒரு காட்சியிலும் தங்களுடைய ஹீரோ இமேஜ் குறைந்து விட கூடாது என நினைப்பார்கள் ஆனால் விஜயகாந்த் சரத்குமாருக்கு அந்த காட்சியில் நடிக்க வாய்ப்பளித்திருக்கிறார். இந்த படம் தான் சரத்குமாருக்கு கோலிவுட்டின் வெளிச்சத்தை காட்டியது. மேலும் விஜயகாந்துக்கு வந்த பட வாய்ப்பு ஒன்றையும் சரத்குமாருக்கு கொடுத்து இருக்கிறார். இதை சரத்குமார் ஒரு மேடையில் மனம் நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு பல கேலி, கிண்டலுக்கு ஆளாகினார். இப்போது அவருடைய உடல்நிலை அனைவரும் அறிந்ததே. இன்று அவர் மக்களிடம் பேசும் நிலைமையில் இல்லாத போதும், அவருடைய புகழை மற்ற கலைஞர்கள் பேசி கொண்டு இருக்கிறார்கள். விஜயகாந்த் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது என சொல்லும் நடிகர்களில் சரத்குமாரும் ஒன்று.