டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சின்மயி.. அட! இந்த 5 டாப் ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்தது இவங்களா?

Chinmayi: தக்லைஃப் இசை வெளியீட்டு விழாவின் மூலம் பின்னணிப் பாடகி சின்மயி பெரிய அளவில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் அவர் மீது இருக்கும் தடையை நீக்க சமூக வலைத்தளத்தில் பலரும் பேசி வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் இதற்கு முன்பு அவர் பாடிய பாடல்களை தேடி தேடி கேட்டு வருகிறார்கள். பின்னணிப் பாடகியாக மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் சின்மயி பல படங்களில் டாப் ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட ஆறு ஹீரோயின்களை பற்றி பார்க்கலாம்.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சின்மயி

சில்லுனு ஒரு காதல்: சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் ‘ நான் உன் கூட நூறு வருஷம் வாழனும் கௌதம்’ என்ற வசனம் இன்று வரை பிரபலம்.

இதை பேசியதே சின்மயி தான். இந்த படத்தில் சூர்யாவின் முன்னாள் காதலியாக நடித்த பூமிகாவுக்கு குரல் கொடுத்தது இவர்தான்.

விண்ணை தாண்டி வருவாயா: திரிஷாவின் கேரியரில் மிகப்பெரிய மாற்றத்தை தந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தில் வரும் ஜெஸ்ஸி கேரக்டருக்கு அவருடைய குரல் மிகப்பெரிய பாசிட்டிவ். அந்த குரலை த்ரிஷாவுக்கு கொடுத்தது சின்மயி தான்.

ஏ மாயா சேசவா: விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்த ரசிகர்கள் அதன் தெலுங்கு வர்ஷனை ஓடிப்போய் பார்க்க காரணம் சமந்தா தான்.

எப்படி தமிழில் த்ரிஷாவுக்கு சின்மயி குரல் கொடுத்திருந்தாரோ அதே மாதிரி தெலுங்கு வர்ஷனில் சமந்தாவுக்கும் குரல் கொடுத்திருந்தார்.

தாம் தூம்: ரவி மோகன் நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் ஹீரோயினாக நடித்திருப்பார். ரொம்பவும் துருதுருவென இருக்கும் கிராமத்து பெண்ணாக வரும் இவருக்கு டப்பிங் பேசியது சின்மயி.

96: நடிகை திரிஷாவின் பல ஆளுமையான கேரக்டர்களுக்கு குரல் கொடுத்தது சின்மயி என்பது எல்லோருக்குமே தெரியும். அந்த லிஸ்டில் 96 படத்தில் வரும் ஜானுவுக்கு டப்பிங் பேசியது இவர்தான்.