தமிழ் ஹீரோக்கள் அக்கட தேசம் தாவும் ரகசியம்.. 2020ல் மொத்தமாய் 1800 கோடி வசூலித்த 5 படங்கள்

தற்போது கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் பலரும் மற்ற மொழி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட பலரும் தெலுங்கு தயாரிப்பாளர்களின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் மற்ற மொழிகளில் வெளியாகும் படங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவது தான். அதே போன்று வசூலிலும் மற்ற மொழி திரைப்படங்கள் மாஸ் காட்டி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் மொத்தமாக 1800 கோடிகள் வசூலித்த ஐந்து திரைப்படங்களைப் பற்றி இங்கு காண்போம்.

Also read:வாரிசு சூட்டிங்கில் நடக்கும் அநியாயம்.. 250 கோடிகளில் லாபம் பெற்றும் நடக்கும் மோசமான சம்பவம்

கேஜிஎஃப் 2 பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ், ஸ்ரீநிதி செட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது. கன்னட மொழியில் உருவான இந்த திரைப்படம் தமிழ் உட்பட பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.

விக்ராந்த் ரோனா பிரபல கன்னட நடிகர் சுதீப் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்சன் மற்றும் அட்வென்ச்சர் த்ரில்லர் படமாக உருவான இந்த திரைப்படம் 200 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்தியது.

Also read:மறைமுகமாக ஆப்படித்த இளைய தளபதி.. ரெட் ஜெயிண்ட் மூவிஸ்சை பழிக்கு பழிவாங்கிய விஜய்

777 சார்லி ரக்ஷித் செட்டி, சார்லி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் கன்னட மொழியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. அட்வென்ஜர் கலந்த காமெடி திரைப்படமாக வெளிவந்த இந்த படம் வெறும் இருபது கோடி ரூபாயில் மட்டுமே படமாக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் வசூல் நூறு கோடியை தாண்டி வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது.

ஜேம்ஸ் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், பிரியா ஆனந்த், ஸ்ரீகாந்த் நடிப்பில் படம் கடந்த மார்ச் மாதம் வெளிவந்தது. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அந்த வகையில் இறந்த பிறகும் புனித் ராஜ்குமாருக்கு இப்படம் பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.

காந்தாரா ரிஷப் செட்டி இயக்கி நடித்துள்ள இந்த திரைப்படம் தற்போது வசூலில் பல சாதனைகள் புரிந்து வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்துள்ள இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை மிரட்டி இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் தற்போது 200 கோடியை தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கிறது.

Also read:சிவகார்த்திகேயனை முந்திய கார்த்தி.. பிரின்ஸ், சர்தார் 4 நாள் வசூல் இதுதான்