லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் டாப் குக் டூப்பு குக்.. சரியான போட்டி ஆரம்பம்

Sun Tv: ரியாலிட்டி ஷோ என்றாலே விஜய் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மக்களிடம் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளும் மறக்க முடியாத ஒரு ரியாலிட்டி ஷோவாக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. அதனால் ஒவ்வொரு வருஷமும் பிக் பாஸ் மற்றும் குக் வித்து கோமாளி நிகழ்ச்சிகள் வந்துவிடும்.

அதே மாதிரி சமீபத்தில் குக் வித்து கோமாளி சீசன் 6 தொடங்கி இருக்கிறது. மற்ற சீசன்களை விட இந்த சீசன் சூப்பராக இருக்கிறது, பார்க்க ஆர்வமாகவும் இருக்கிறது என்று மக்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். அதிலும் விஜய் டிவியுடன் பஞ்சாயத்து பண்ணிய லட்சுமி ராமகிருஷ்ணன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் சர்ச்சையை ஏற்படுத்திய தேனடை ஆகியவர்களை சமாதானப்படுத்தி இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி களம் இறக்கி இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் வெங்கடேஷ் பட் இல்லை என்றாலும் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் தாமு வைத்து கடைசி சீசன் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இன்னொரு செப் வேண்டும் என்று சன் டிவியில் இருந்து கௌஷிக் கூட்டிட்டு வந்திருக்கிறார்கள். இப்படி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த மூன்று வாரமாக விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணி வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி தொடங்கி விட்டால் இதற்கு போட்டியாக சன் டிவி சேனலும் டாப் குக் டூப்பு குக் என்ற நிகழ்ச்சியை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த வருடம் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட சீசன் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக ஹிட் ஆகிவிட்டது. இதனைத் தொடர்ந்து கோமாளி சீசன் தொடங்கிய நிலையில் ஏன் இன்னும் சன் டிவி டாப் குக் டூப்பு குக் நிகழ்ச்சியை தொடங்கவில்லை என்று மக்கள் கேள்வியை எழுப்பினார்கள்.

தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியை தயாரிக்க கூடிய மீடியா மேசன் நிறுவனம் பதில் அளித்திருக்கிறது. அதாவது முதல் சீசன் ஹிட்டாகிவிட்டது, அதே மாதிரி இரண்டாவது சீசனும் நிச்சயம் உண்டு. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக நாங்கள் வருவோம். ஆனால் தற்போது நானும் ரவுடிதான் என்ற நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கிறது.

அதனால் இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் டாப் குக் டூப்பு குக் நிகழ்ச்சி வந்துவிடும். அதே நேரத்தில் நாம் யாரையுமே போட்டியா நினைச்சு எதையும் செய்வதில்லை. அதனால் வர வேண்டிய நேரத்தில் வந்துவிடும், முதல் சீசனை விட இரண்டாவது சீசன் தரமாக இருக்கும்.

மக்களின் பொழுதுபோக்குக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு கொடுக்க வேண்டும் என்பதில் முழு கவனத்தையும் செலுத்தி புதுசு புதுசாக வித்தியாசமாக கொடுக்க தயாராகிக் கொண்டு இருக்கிறோம் என மீடியா மேசன் நிறுவனம் பதில் கொடுத்து இருக்கிறது. அப்படி வரும் பொழுது இதை தொகுத்து வழங்கக் கூடியவராக மணிமேகலை வந்துவிடுவார்.