ஹிந்தி படம் நடிக்க போனதால் கமலுக்கு வந்த நிலைமை.. புகழை மட்டுமல்லாமல் நடிகையையும் தூக்கிய நாயகன்

தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு நடிப்பு, இயக்கம் போன்ற பன்முக திறமை கொண்டவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் கருப்பு வெள்ளை காலம் முதல் டிஜிட்டல் காலம் வரை, பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

உலகநாயகன் என்ற பெயருக்கேற்ப, உலக அளவில் ரசிகர்களை பெற்றிருக்கும் கமலஹாசன் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் நடிக்கச் சென்றார். அவர் பாலிவுட்டிற்கு சென்ற நேரம் தமிழ் சினிமாவை ஒரு நடிகர் பட்டா போட்டு ஆக்கிரமித்துக் கொண்டார்.

1980களில் ஏக் தூஜே கே லியே, சனம் தெரி கசம், ஏ தோ கமால் ஹோகயா, சாரா சி சிந்தகி, சத்மா, யேக் தேஸ், ஏக் நய் பகெலி, யாட்கர், ராஜ் திலக், கரிஷ்மா போன்ற ஹிந்தி படங்களில் கமலஹாசன் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.

இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று காத்துக் கொண்டிருந்த நடிகர் மோகன் அந்த நேரத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தார். நிறைய படங்களில் நடித்து பெருமையையும் புகழையும் சம்பாதித்து விட்டார்.  அந்த சமயம் மைக் மோகன் படம் என்றாலே ரசிகைகள் அவர்மீது பைத்தியமாய் இருந்தார்கள்.

அவர்கள் மட்டுமல்ல கமலின் ஆஸ்தான நாயகிகளான ராதாவை தன் பின்னால் சுத்த வைத்துவிட்டார். பிரபல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் மைக் மோகனின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர். அந்த அளவிற்கு கோலிவுட்டில் மைக் மோகன் கமலஹாசன் விட்டுச்சென்ற இடத்தை லாபகரமாக பிடித்துக்கொண்டார்.

பிறகு 1985 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஒரு கைதியின் டைரி’  அதன்பிறகு காக்கிச்சட்டை, அந்த ஒரு நிமிடம், உயர்ந்த மனிதன் போன்ற அடுத்தடுத்த படங்களில் கமலஹாசன் சூப்பர் ஹிட் கொடுத்து தமிழில் மீண்டும் தனக்கென்று ஒரு இடத்தை பதிவு செய்தார். இருப்பினும் மோகன் வளர்ச்சிக்கு அந்த சமயம் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த கமலஹாசனின் ஹிந்தி பயணம் தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.