தமிழ் படங்களை அலறவிட்ட 5 கன்னட படங்கள்.. தளபதியை டீலில் விட்ட அந்த படம்

பொதுவாகவே டப்பிங் படங்கள், மற்ற மாநிலங்களில் வெற்றி பெறுவது கடினம். ஒரு படம் வெற்றி பெற்றால் அதை ரீமேக் செய்து பிற மொழிகளில் ரிலீஸ் செய்வார்கள். ஒரு சில படங்களை அப்படியே அந்தந்த மொழிகளில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்வார்கள். இது போன்ற படங்கள் பொதுவாக எடுபடாமல் போய்விடும். இதிலிருந்து விதிவிலக்காக சில டப்பிங் படங்கள் டாப் ஹீரோக்களின் படங்களையே அலறவிட்டிருக்கின்றன.

1.கே ஜி எஃப்: 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கன்னட படம் கே ஜி எஃப். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. அந்த வருடத்தின் எல்லா விருதுகளையும் வாங்கியதோடு, தமிழ் சினிமாவை கொஞ்சம் அசைத்தே பார்த்தது.

2.ஆர்ஆர்ஆர்: இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், ஆலியா பட் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த வருடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றால் ஆர்ஆர்ஆர். இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தம் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

3.காந்தாரா: 2022ஆம் ஆண்டு இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் காந்தாரா. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருக்கிறார். இந்த படத்தில் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை நில அரசியலோடு கலந்து கூறியிருக்கிறார்கள். இந்த படம் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ரிலீசான பொன்னியின் செல்வனின் வசூலை ஒரு சில மாநிலங்களில் பீட் செய்தது.

4.பாகுபலி: இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிரம்மாண்டமாக இன்னும் இருப்பது பாகுபலி தான். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, நாசர், ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் நடித்த இந்த படம் உலகமெங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படம் தமிழ் சினிமாவை மட்டுமின்றி இந்திய சினிமாவையே அசைத்து பார்த்தது.

5.கே ஜி எஃப் 2: 2018 ஆம் ஆண்டு ரிலீசான கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்தது தான் கே ஜி எஃப் 2. முதல் பாகத்தின் தாக்குதலாலேயே இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய ஹைப் இருந்தது. இந்த படத்தை அந்த படக்குழுவினர் தைரியமாக தளபதியின் பீஸ்ட்டுடன் வெளியிட்டது. இந்த படம் பிக்கப் ஆக, பீஸ்ட் படத்திற்கு தியேட்டர்கள் குறைந்தன.