திரிஷா fan-ஆ நீங்க.. அப்போ OTT-ல இந்த 5 படங்களை மிஸ் பண்ணாம பாருங்க.!

இது த்ரிஷா காலம்.. ஒரு காலத்தில், நயன்தாரா பல படங்களில் போட்டி போட்டு நடித்துக்கொண்டிருந்தார். இப்போது திரிஷா தமிழ் தெலுங்கு என்று, பல படங்களில் கமிட் ஆகி, டாப் ஹீரோயினாக வளம் வருகிறார். நீங்க திரிஷா fan-ஆ இருந்தால் இந்த படத்தையெல்லாம் கண்டிப்பா பாருங்க.

திருப்பாச்சி: இந்த லிஸ்டில் முதலில் இருப்பது, திருப்பாச்சி. கில்லி பட வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த படம் திருப்பாச்சி. பேரரசு இயக்கியிருந்த இந்த படம் தங்கை செண்டிமென்ட் உடன் அதிரடியான சண்டை காட்சிகளுடன் விறுவிறுப்பான படமாக அமைந்திருக்கும். படத்தில் த்ரிஷாவின் டான்ஸ், கவர்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் உள்ளது.

லியோ: விஜய்யின் மனைவியாக, இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக த்ரிஷா நடித்திருக்கும் லியோ கடந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிய படமாக உள்ளது, லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.

மங்காத்தா: வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50வது படமான மங்காத்தாவில், த்ரிஷா ஹீரோயினாக நடித்திருப்பார். அஜித்தின் காதலியாக தோன்றியிருப்பார். ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான மங்காத்தா சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் உள்ளது.

சாமி: விக்ரம் ஜோடியாக த்ரிஷா நடித்த சாமி படத்தை ஹரி இயக்கியிருப்பார். விக்ரம் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், அவரை காதலித்து மனைவியாகும் கதாபாத்திரத்திலும் த்ரிஷா நடித்திருப்பார். ஹோம்லி பெண்ணாகவும், பாடலில் கவர்ச்சியும் காட்டி ரசிகர்களை கவர வைத்திருப்பார்.

என்னை அறிந்தால்: த்ரிஷா, அஜித்துடன் இணைந்து நடித்த படம் என்னை அறிந்தால். கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஹெமானிகா என்ற பெயரில் கிளாசிக்கல் டான்சராகவும், அஜித்தின் காதலியாகவும் த்ரிஷா தோன்றியிருப்பார். இவர் வரும் இடங்களிலெல்லாம் அழகு சேர்த்திருப்பர். பொம்மை போன்ற இவருடைய அழகு ரசிகர்களை கட்டி போட்டது.