Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மதராஸி-யை தட்டி தூக்கிய Netflix.. எத்தனை கோடி பிசினஸ் தெரியுமா?

மதராஸி-யை தட்டி தூக்கிய Netflix.. எத்தனை கோடி பிசினஸ் தெரியுமா?

Sivakarthikeyan : சினிமாவில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி இன்று ஒரு ஹீரோவாக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். வெற்றிப் பயணம் : சிவகார்த்திகேயன் பல படங்களில் வெற்றியை கொடுத்திருந்தாலும் அமரன் திரைப்படம் பயங்கரமான ஹிட் கொடுத்தது அதுவும் அவருக்கு […]

Sivakarthikeyan : சினிமாவில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி இன்று ஒரு ஹீரோவாக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்.

வெற்றிப் பயணம் : சிவகார்த்திகேயன் பல படங்களில் வெற்றியை கொடுத்திருந்தாலும் அமரன் திரைப்படம் பயங்கரமான ஹிட் கொடுத்தது அதுவும் அவருக்கு முகுந்தன் கேரக்டர் மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்தது.

இப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. 2023-இல் A.R முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தின் அப்டேட்டை பட குழு வெளியிட்டது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த முதல் படத்தில் அனிருத் தான் இசையமைக்கிறார். படத்திற்கான பரபரப்பான தீம் மற்றும் பாடல்களும் தயாராகி கொண்டிருக்கிறது.

முக்கிய கதாபாத்திரங்கள் : ஆக்ஷன் திரில்லரான இப்படத்தில் ஹீரோயினாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விட்யுத் ஜம்முவால், பிஜு மேனன் இவர்கள் இணைந்துள்ளனர்.

மதராசி படத்தின் பட்ஜெட் மட்டும் கிட்டத்தட்ட 200 கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக இயக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளது. ஏனென்றால் சிவகார்த்திகேயன் படம் என்றால் நிச்சயம் நல்ல பிரம்மாண்டமான வெற்றியை கொடுக்கும்.

3 மாதங்களுக்கு முன்பு மதராசியின் 44 வினாடிகளை கொண்ட title glimpse வெளியாகி வைரலானது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஆக்சன் மற்றும் பரபரப்பான ரோலில் கலக்கியிருக்கிறார்.

திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தியில் செப்டம்பர் 5 ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஓடிடி நெட்ஃப்லிக்ஸில் ₹23 கோடிக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. Oct 3 தேதி OTT-யில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாய்பல்லவி மாதிரி வருமா?

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார் என்பது தற்போது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது. என்னதான் இருந்தாலும் நம்ம சாய்பல்லவி சிவகார்த்திகேயன் காம்போ மாதிரி வருமா என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்த வருகின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.