திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

உலக அழகி வேண்டாம் பாகுபலி நடிகை நீங்க வாங்க.. ஜெயிலர் படத்தில் நடந்த ட்விஸ்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளார். அண்மையில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்நிலையில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகளை படக்குழு தேர்வு செய்து வருகிறது.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படமும், நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் ரஜினி மற்றும் நெல்சன் இருவருமே ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.

இதனால் ஜெயிலர் படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் உலக அழகி ஐஸ்வர்யா இணையுள்ளார் என இணையத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கயுள்ளார் என கூறப்படுகிறது. அதாவது படையப்பா படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தனர்.

அந்தப் படத்தில் ரஜினிக்கு இணையாக ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் பேசப்பட்டது. இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் சரத்குமார், கமல் என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதுவரை ரஜினிக்கு ஜோடியாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்ததில்லை.

இதனால் ஜெயிலர் படக்குழு புது முயற்சியாக சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு உலக அழகியே ரிஜக்ட் செய்து விட்ட பாகுபலி சிவகாமி தேவியை ஜெயிலர் படக்குழு தேர்வு செய்துள்ளது. இந்த புது முயற்சியில் ஜெயிலர் படக்குழுக்காக கை கொடுக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Trending News