கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மாபெரும் ஹிட்டடித்தது. இப்படத்தை கமல் தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். விக்ரம் படத்தில் கிடைத்த லாபத்தில் சரியான பங்கு உதயநிதி கமல்ஹாசனிடம் கொடுத்துள்ளார். அதனால் தற்போது கமல் படம் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது வளர்ந்து வரும் நடிகர்களின் படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் தற்போது கமல் தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ள படத்தின் கதாநாயகர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் : தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான டாக்டர், டான் படங்கள் 100 கோடி வசூலை எட்டியது. இந்நிலையில் பிக்பாஸ் மேடையிலேயே சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கப்போவது உறுதிப்படுத்தினார் கமலஹாசன்.
உதயநிதி ஸ்டாலின் : உதயநிதி நடிப்பில் கடைசியாக வெளியான நெஞ்சுக்கு நீதி படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் உதயநிதியுடன் இணையப் போவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதாவது உதயநிதி படத்தை கமல் தயாரிக்க உள்ளார்.
சிம்பு : சிவகார்த்திகேயன் உதயநிதியை தொடர்ந்து சிம்புவின் படத்தை தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் கமல் தயாரிக்க உள்ளார். சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு, பத்துதல போன்ற படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இதை தொடர்ந்து கமல் படத்தில் சிம்பு இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபகத் பாசில் : கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஃபகத் பாசில். இதன் மூலம் ஏற்பட்ட நட்பின் காரணமாக பகத் பாசிலின் படத்தை கமலஹாசன் தயாரிக்க உள்ளார். இப்போது தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்கள் மட்டும் ஏற்று நடித்து வரும் ஃபகத் பாசில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
துல்கர் சல்மான் : மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் துல்கர் சல்மான். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். இதனால் இங்கும் துல்கர் சல்மானுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதை கருதி தற்போது அவரிடம் கமல் தரப்பில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதனால் விரைவில் துல்கர் சல்மான் படத்தை கமல் தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.