Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தக் லைஃப் ஸ்கோர் செய்ததா, கோட்டைவிட்டதா.? முழு விமர்சனம்

தக் லைஃப் ஸ்கோர் செய்ததா, கோட்டைவிட்டதா.? முழு விமர்சனம்

Thug Life Review : நாயகன் படத்திற்கு பின் 38 வருடங்கள் கழித்து மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணி தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உடன் இருந்த நிலையில் இப்படம் ஸ்கோர் செய்ததா […]

Thug Life Review : நாயகன் படத்திற்கு பின் 38 வருடங்கள் கழித்து மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணி தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உடன் இருந்த நிலையில் இப்படம் ஸ்கோர் செய்ததா இல்லை கோட்டை விட்டதா என்று முழு விமர்சனத்தை பார்க்கலாம்.

தொடக்கமே கமல் டெல்லியில் பெரிய டானாக உள்ள ரெங்கராய சக்திவேல் கதாபாத்திரத்தில் வருகிறார். அவருடைய அண்ணனாக நாசர் இருக்கிறார். மேலும் இந்தக் கூட்டத்தில் ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள் ஆகியோர் இருக்கின்றனர்.

இந்த அணிக்கு எதிராக மகேஷ் மஞ்ச்ரேக்கரின் அணி செயல்பட்டு வருகிறது. இந்த இரு அணிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும் போது கமல் தரப்பினரால் அப்பாவியான சிம்புவின் அப்பா குமரவேல் கொல்லப்படுகிறார். அப்போது தனது அப்பாவை பார்த்து கதறி அழுத சிம்புவை கமல் வளர்கிறார்.

மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணியில் வெளியான தக் லைஃப் படத்தில் விமர்சனம்

மேலும் கமலுடன் சிம்புவும் வளரும் நிலையில் அவரும் டானாகவே வளர்கிறார். அவர்கள் பல சம்பவங்கள் செய்யும் நிலையில் அதை அழிக்க மகேஷ் திட்டம் போட்டு வருகிறார். மற்றொருபுறம் கமலின் அண்ணன் நாசர் முதலிடத்திற்கு வரவேண்டும் என்று குள்ளநரி வேலை செய்கிறார்.

அதாவது தன் விரலை வைத்து கண்ணை குத்துவது போல சிம்புவை வைத்தே கமலை எதிர்க்க செய்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் தக் லைஃப் படத்தின் கதை. படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் கமல் சிம்பு மட்டும் தான் மனதில் இருக்கிறார்கள்.

திரிஷாவின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. ஏ ஆர் ரகுமானின் இசை நன்றாக இருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த முத்த மழை பாடல் படத்தில் இடம்பெறவில்லை. இயக்குனர் எடிட்டிங்கில் இந்த பாடலை எடுத்தது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்.

முதல் பாதி சற்று விறுவிறுப்பாக சென்ற நிலையில் இரண்டாம் பாதி தொய்வாகத்தான் இருந்தது. மேலும் படம் முழுக்க வசனங்கள் இடம் பெற்றது ரசிகர்களுக்கு அலுப்பு தட்டியது. கேங்ஸ்டர் படமாக இருந்தாலும் சுவாரசியமுடன் கொடுப்பதில் மணிரத்னம் கோட்டை விட்டுவிட்டார்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.