Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

தேசிய விருதுக்குப் பிறகு.. நடிப்பு அரக்கியாக மாறிய கீர்த்தி சுரேஷ்

தேசிய விருதுக்குப் பிறகு.. நடிப்பு அரக்கியாக மாறிய கீர்த்தி சுரேஷ்

தன்னுடைய சினிமா பயணத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் கமர்ஷியல் ஹீரோயின் என்ற அடையாளத்துடன் வலம் வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது அந்த எல்லைகளைத் தாண்டி, தனது நடிப்புத் திறமைக்கு தீனி போடும் கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

குறிப்பாக, மகாநடிகை படத்திற்காக தேசிய விருது பெற்ற பிறகு, வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பென்குயின், மிஸ் இந்தியா, சாணிக்காயிதம் போன்ற படங்கள் ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன.

தெலுங்கில் அவர் நடித்த உப்பு கப்புரம், இந்தியில் நடித்த பேபி ஜான் போன்ற படங்களும் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படங்களாக அமைந்தன.

சமீபத்தில் வெளியான டோரதி திரைப்படம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘அக்கா’ வெப் சீரிஸ் ஆகியவற்றில் அதிரடியான தோற்றத்திலும், ஆக்ஷன் காட்சிகளிலும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலும் தனது நடிப்பால் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், முதன்முறையாக இயக்குநர் மிஷ்கினுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

வழக்கறிஞர் பின்னணியைக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.