Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சினிமாவில் நடிக்க விரும்பும் சுந்தர்சியின் மகள்.. உதவி செய்ய மாட்டேன் என உறுதியாக இருக்கும் குஷ்பூ

சினிமாவில் நடிக்க விரும்பும் சுந்தர்சியின் மகள்.. உதவி செய்ய மாட்டேன் என உறுதியாக இருக்கும் குஷ்பூ

ரஜினி, கமல், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை குஷ்பூ. ஸ்லிம்மாக இருந்தால் மட்டுமே ஹீரோயினாக முடியும் என்ற ட்ரெண்டை மாற்றியவர் குஷ்பூ தான். தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த குஷ்புகாக கோயில் கட்டப்பட்டது. […]

ரஜினி, கமல், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை குஷ்பூ. ஸ்லிம்மாக இருந்தால் மட்டுமே ஹீரோயினாக முடியும் என்ற ட்ரெண்டை மாற்றியவர் குஷ்பூ தான். தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த குஷ்புகாக கோயில் கட்டப்பட்டது. மேலும் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் குஷ்பு தனது பங்களிப்பை கொடுத்தார்.

சமீபத்தில் குஷ்பு தனது எடையை பாதியாக குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவருடைய பதிவு பலரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அதாவது குஷ்புவும், இயக்குனர் சுந்தர்சியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இதில் மூத்த மகளான அவந்திகா வெற்றிகரமாக லண்டன் சென்று தனது நடிப்பு பயிற்சியை முடித்து விட்டதாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவந்திகா இதை விரும்பியதால் அவருடைய போராட்டம் இப்போது தொடங்கி உள்ளது என கூறியுள்ளார். மேலும் நாங்கள் அவளை அறிமுகப்படுத்தவோ அல்லது எங்கும் பரிந்துரைக்கவோ மாட்டோம் என குஷ்பூ வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் அவளுக்கு உங்கள் ஆசீர்வாதம் தேவை என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவந்திகா தனது திறமையால் மட்டுமே சினிமாவில் வளர வேண்டும் என குஷ்பு விரும்புவதாக தெரிகிறது. மேலும் சினிமாவில் அவளேதான் வாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் மிக விரைவில் குஷ்புவின் மூத்த வாரிசான அவந்திகாவை வெள்ளித்திரையில் பார்க்கலாம்.

பெரும்பாலும் சினிமாவில் உள்ள பிரபலங்கள் தங்களது வாரிசுகளை பிரபலமாக வேண்டும் என்பதற்காக பல கோடிக்கணக்கில் செலவு செய்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். ஆனால் நடிகை குஷ்பூ தன் மகள் திறமையால் மட்டுமே முன்னுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.