Seeman: பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரே என்று வடிவேலு ஒரு காமெடியில் சொல்லுவார். அப்படித்தான் இருக்கிறது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசுவது. சீமான் இதுவரை தான் இந்த கட்சியை தான் எதிர்த்து நிற்கிறேன், இதுதான் என்னுடைய கொள்கை என தெளிவாக சொல்லியதே கிடையாது.
எப்போது யாருக்கு ஆதரவு கொடுப்பார் என்று கூட நம்மால் கணிக்க முடியாது. நடிகர் விஜய் முதன்முறையாக மாநாடு நடத்திய போது மற்ற அரசியல் தலைவர்களை விட சீமான் தான் ரொம்பவும் கடுமையான விமர்சனங்களை விஜய் மீது வைத்தது.
விஜய்க்கு சவால் விடும் சீமான்
அதன் பின்னர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்கள் .உடனே விஜய் என்னுடைய தம்பி என்று சொல்லி அந்தர் பல்டி அடித்துவிட்டார்.
சமீபத்தில் சீமான் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்திருந்தார். அது மட்டுமில்லாமல் ஒரு முறை கூட்டத்தில் தான் மயக்கம் போட்டு விழுந்தபோது சாப்பிடாமல் ஏன் இருக்கிறீர்கள் என ஸ்டாலின் தன்னை அக்கறையோடு விசாரித்ததாக வேறு பேசியிருந்தார்.
போதாத குறைக்கு தற்போது விஜய்க்கு எதிராக சவால் விட்டிருக்கிறார். அதாவது சமீபத்திய மீட்டிங் ஒன்றில் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது இலட்சிய கூட்டத்துக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கும் இடையே தான் போட்டி. சித்தாந்தம் ஜெயிக்கிறதா அல்லது சினிமா ஜெயிக்கிறதா என பார்க்கலாம் என பேசி இருக்கிறார்.
அந்த சினிமா ஒரு காலத்தில் சீமானையும் ஆதரித்தது என்பது அவருக்கு மறந்து விட்டது போல. இப்படி தினம் தினம் தன்னுடைய எதிரியை மாற்றிக் கொண்டு அவர் குழப்பம் அடைவது மட்டுமில்லாமல் அவருடைய தொண்டர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்.