#JusticeforAjithkumar: 2026 சட்டமன்ற தேர்தல் ஆனது தமிழகத்தை பொறுத்தமட்டிலும் மதில் மேல் பூனையாக தான் இருக்கிறது. ஒரு பக்கம் 5 வருட ஆட்சி காலத்தில் மக்களுக்கு நிறைய விஷயங்களில் சலிப்பு தட்ட ஆரம்பித்துவிட்டது. இன்னொரு பக்கம் புதுசா வர்றவங்க மட்டும் என்ன செஞ்சுருவாங்க என்ற ஏமாற்றமும் இருக்கிறது.
இந்த நேரத்தை விஜய் சரியாக பயன்படுத்தி மக்கள் எதிர்பார்க்கும் நம்பிக்கையை கொடுத்து விட்டால் கண்டிப்பாக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் நடக்கும். தற்போது திருப்புவனம் பகுதியில் சந்தேகத்தில் அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்து இருக்கிறார்.
நீதி கேட்பாரா விஜய்?
திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சொல்லி போலீஸ்காரர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள். ஆனால் மருத்துவர்கள் அழைத்து வரும்போது அஜித்குமார் உயிருடன் இல்லை என்று மருத்துவ அறிக்கை கொடுத்து விட்டார்கள்.
தற்போது இந்த லாக்கப் மரணம் தமிழகத்தை பெரிய அளவில் உலுக்கி இருக்கிறது. முதலமைச்சர் தலைமை வகிக்கும் காவல்துறையில் தொடர்ந்து இப்படியான பிரச்சனை நடைபெற்று வருகிறது.
இந்த சமயத்தில் விஜய் மட்டும் அஜித் குமார் வீட்டுக்கு சென்று அந்த குடும்பத்தை நேரில் சந்தித்து நீதி கேட்டு போராடினால் கண்டிப்பாக தமிழகமே அவர் பின்னால் நிற்கும். அந்த இடத்திற்கு விஜய் போக வேண்டும் என்பதுதான் தற்போது எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
அதே நேரத்தில் விஜய் ஒரு இடத்திற்கு சென்றால் திடீரென கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்து விட்டால் அங்கேயும் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் நீட் தேர்வில் தோல்வியுற்ற மரணம் அடைந்த அனிதா வீட்டிற்கு விஜய் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் சென்று வந்தது பலருக்கும் தெரியும். அதேபோன்ற சம்பவம் அஜித் குமார் வீட்டில் நடந்தால் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவில் இது ஒரு மிகப்பெரிய எதிரொலியாக அமையும். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இது குறித்து என்ன செய்யப் போகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.