அரியணை ஏறுவதற்கு முன்பே உட்கட்சி போரை துவங்கிய தளபதியின் விழுதுகள்.. விஜய்க்கு ஏற்பட்ட அவமரியாதை!

Vijay: ‘பிள்ளை பெறுவதற்கு முன் பேர் வைப்பது’ என்று சொல்வார்கள், அதைத்தான் தவெக வினர் செய்து கொண்டிருக்கிறார்கள். 250 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி, அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகும் சாதகமான சூழ்நிலை இருந்த போதிலும், மக்களுக்காக சேவை செய்ய வருகிறேன் என்று எல்லாவற்றையும் உதறி தள்ளி விட்டு வருகிறார்.

இது எவ்வளவு சீரியஸான விஷயம் என்று தமிழக மக்களுக்கு புரிந்த அளவு கூட அவருடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புரியாதது ரொம்பவும் ஆச்சரியம் தான். மன்னன் அரியணை ஏறுவதற்கு முன்பே மந்திரிகளுக்கு பதவி ஆசை வந்தால் நாடு எப்படி தாங்கும்.

விஜய்க்கு ஏற்பட்ட அவமரியாதை!

தமிழக வெற்றி கழகம் கட்சியில் பதவிகள் பரிந்துரை பேரில் தரப்படுவதாகவும், பணம் வாங்கி கொண்டு பரிந்துரை செய்வதாகவும் செஞ்சி மாவட்டத்தில் ஒரே அக்கப்போர்.

நேற்றைய தினம் செயற்குழு கூட்டம் அங்கு நடக்க, புஸ்ஸி ஆனந்த் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருக்கும் போதே பஞ்சாயத்து ஆரம்பித்து இருக்கிறது. விஷயம் பெருசாக ஆனந்த் அந்த இடத்தை விட்டு நைசாக கழண்டு கொண்டாராம்.

தள்ளு முள்ளு வரை சென்று, ஒரு கட்டத்தில் கையில் வைத்திருந்த விஜய்யின் புகைப்படத்தையே கீழே போட்டு காலால் மிதித்து இருக்கிறார்கள்.

அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்ட கட்சிகளே தங்களுடன் கூட்டணிக்கு வருமாறு சிவப்பு கம்பளம் விரித்து கொண்டிருக்க, இந்த உட்கட்சி பூசல் விஜய்க்கு பெரிய அடியாக விழ அதிக வாய்ப்பிருக்கிறது.