Vijay: விஜய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. கோயம்புத்தூரில் பூத் கமிட்டி மீட்டிங் தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் தலைமையில் நடத்தப்பட்டது.
மக்கள் ஆரவாரத்தில் விஜய் திளைத்தது தமிழக அரசியல் தலைவர்களை கொஞ்சம் ஆட்டம் காணவும் வைத்திருக்கிறது.
விஜய் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியில் வந்து மக்களை சந்திக்க வேண்டும், work from home அரசியல் செய்கிறார், பனையூர் பண்ணையார் என ஏகப்பட்ட விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டது.
இதை எல்லாவற்றையும் அடித்து நொறுக்கும் படி கடந்த இரண்டு நாட்கள் தரமான சம்பவம் பண்ணினார். அதே நேரத்தில் விஜய் வெளியில் வந்தால் அவருக்கு எவ்வளவு ஆபத்து காத்திருக்கிறது என்பதையும் மக்கள் புரிந்து கொண்டார்கள்.
ஒரு பக்கம் விஜய் நேரில் பார்த்து விட வேண்டும், அவரை தொட வேண்டும் என ரசிகர்கள் முன்னிணைத்துக் கொண்டு செய்த விஷயமே அதிர்ச்சியாக இருந்தது.
அதை தாண்டி நேற்று விஜய் சென்னைக்கு திரும்ப விமான நிலையம் வந்தபோது கூட்டத்தில் ஒருவர் விஜயின் தலையில் அடிக்கிறார்.
அத்தனை பாதுகாப்புகளையும் தாண்டி விஜய்க்கு இப்படி நேர்ந்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒருவர் முன்னெடுத்து வரும்போது என்னதான் செய்கிறார் பார்ப்போம் என வழி விடுவது தான் ஆகச் சிறந்த நாகரீகம்.