TVK Vijay: முதல்வன் பட கிளைமேக்ஸ் காட்சியில் அர்ஜுன், கடைசியில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே என்று கேட்பார்.
அந்த நிலைமை தான் இப்போது விஜய்க்கு நடந்து கொண்டிருக்கிறது. மாநாடு, செயற்குழு கூட்டம் என்று அமைதியாக இருந்தவரை ஒர்க் பிரம் ஹோம் அரசியல்வாதி, பனையூர் பண்ணையார் என ஏகத்துக்கும் உசுப்பேத்தி விட்டார்கள்.
கடைசியில் இப்போது தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது.
பலே அரசியல்வாதி ஆயிட்டாரே!
ஒரு பக்கம் விஜய்க்கு இவ்வளவு கூட்டம் கூடுதா என்று ஆச்சரியப்பட்டாலும், என்னமோ சரியில்லையே என்று லேசாக ஒரு கூட்டத்துக்கு பொறி தட்டவும் செய்கிறது.
இதற்கு காரணம் விஜய் இதுக்கு முன்னாடியும் தமிழ்நாட்டுல பல இடங்களில் படப்பிடிப்புக்கு போயிருக்கிறார், அப்போதெல்லாம் இந்த கூட்டம் எங்க போச்சு என்ற சந்தேகம் தான்.
மதுரை படப்பிடிப்புக்கு போறான், கொடைக்கானலுக்கு போறேன்னு விஜய் ஹிண்ட் கொடுப்பது தான் இன்னும் சந்தேகத்தை வலுவடைய செய்திருக்கிறது.
தனக்கு எவ்வளவு கூட்டம் சேர்கிறது என்பதை எதிரிகளுக்கு காட்டும் நிர்பந்தத்தில் இருக்கிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை.
தானா சேர்ந்த கூட்டமோ, இல்ல தொண்டர்கள் சேர்க்கும் கூட்டமோ, 50 ஆண்டுகளாக இருக்கும் அரசியல் கட்சிகளால் கூட்ட முடியாத கூட்டத்தை விஜய் கூட வைத்திருக்கிறார், பழம் தின்னு விதை போட்ட அரசியல்வாதிகளை மிரள வைத்திருக்கிறார்.