TVK Vijay: நெருப்பில்லாமல் புகையாது என்று சொல்வார்கள். கடந்த சில தினங்களாக விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி அதிமுகவுடன் இணைய போகிறது என்று வெளியாகும் செய்தியும் அப்படித்தான் இருக்கிறது. அதிமுக தெளிவாகவே தாங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.
இந்த நிலையில் விஜய் எப்படி அதிமுகவுடன் இணைவார் என்ற கேள்வி எல்லோருக்கும் இருந்தது. இது குறித்து பத்திரிகையாளர் பாண்டியராஜன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.
சரண்டர் ஆன தளபதி
அந்த பேட்டியில் மாஸ்டர் பட சமயத்தில் விஜய் வீட்டில் நடந்த ரெய்டு பற்றி பேசி இருக்கிறார். அந்த சோதனையின் போது விஜய் வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் நெக்லஸிற்கான ரசீது எடுக்கப்பட்டு இருக்கிறது.
அந்த நெக்லஸை விஜய் பிரபல நடிகை ஒருவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறாராம். இது குறித்த கணக்கு வழக்கு எல்லாம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆரோக்கியசாமி தான் சமீபத்தில் முடித்து வைத்திருக்கிறார்.
பொதுவாக இந்தியாவில் கூட்டணி என்பதெல்லாம் அமலாக்கத்துறை சோதனை தான் முடிவு செய்கிறது. அதன்படி பாரதிய ஜனதா கட்சியின் கண்ட்ரோலில் விஜய் இருப்பதாக பாண்டியராஜ் பேசி இருக்கிறார். மேலும் விரைவில் தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக கட்சியின் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லியிருக்கிறார்.