விஜய் எடுக்க போகும் அடுத்த அஸ்திரம்.. இனி போற பாதை சிங்கப்பாதை தான்

Vijay: சிவாஜி படத்தில் இன்டர்வெல் காட்சியில் ரஜினிகாந்த் இனி நான் போற பாதை சிங்கப் பாதை என்று சொல்லி இருப்பார். அப்படி ஒரு இன்டர்வல் காட்சி தான் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது.

அந்த சிங்கப் பாதையை தேர்ந்தெடுத்து இருப்பவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய். இதுவரை தமிழகத்தில் ஆண்ட கட்சிகள், ஆளுவதற்கு காத்திருக்கும் கட்சிகள் எல்லாமே திமுகவுக்கு எதிராக ஊழல், குடும்ப அரசியல் என எம்ஜிஆர் காலத்தில் இருந்து என்ன குற்றம் சாட்டப்பட்டதோ அதை தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

விஜய் எடுக்க போகும் அடுத்த அஸ்திரம்

ஆனால் விஜய் திமுகவுக்கு எதிராக எடுக்கும் அஸ்திரங்கள் அந்த கட்சியை விஜய் கையில் கொடுத்திருக்கக் கூடியவை. பரந்தூர் விமான நிலையம் நிலம் கையகப்படுத்துதல், லாக்கப் மரணங்கள் என திமுக அரசின் ஒவ்வொரு வீழ்ச்சியையும் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.

இன்னும் ஒரு வருடத்தில் திமுக எந்தெந்த இடத்தில் எல்லாம் அடி வாங்குகிறதோ அதை எல்லாம் கையில் எடுத்து பிரச்சார கருவியாக பயன்படுத்துவார். அது மட்டுமில்லை, தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு விரைவில் நடைபெற இருக்கிறது.

அதற்குள் கட்சியை பெரிய அளவில் பலப்படுத்துவதற்காக நிர்வாகிகள் இடம் வேலைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. மேலும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் செயலி ஒன்றையும் தொடங்க இருக்கிறார்கள். போற போக்கை பார்த்தால் விஜய் 2026 சட்டமன்ற பேரவை தேர்தலில் ஓட்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரப் போகிறார் என்பது தெரிகிறது.