Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வலிமையில் வினோத் செய்த தவறை மீண்டும் செய்யும் லோகேஷ்.. ஃபிளாப்பாக காரணமான விஷயம்

வலிமையில் வினோத் செய்த தவறை மீண்டும் செய்யும் லோகேஷ்.. ஃபிளாப்பாக காரணமான விஷயம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி மற்றும் மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி மற்றும் மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற 3ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஏகப்பட்ட சுவாரசியமான விஷயங்களை உள்ளடக்கி வைத்துள்ளார் லோகேஷ். அதாவது விக்ரம் படத்தில் கமல் இளமை தோற்றத்தில் சில காட்சிகளில் உள்ளார் என்றும் அதற்காக 10 கோடி செலவானதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் இருவரும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் கமல்ஹாசனுக்கு லோகேஷ் கனகராஜ் தான் மேக்கப் போட்டுள்ளார் என்ற செய்தி அண்மையில் வெளியானது. ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து பார்த்து செய்த லோகேஷ் ஒரு விஷயத்தில் கோட்டைவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

அதாவது சமீபகாலமாக வெளியாகும் படங்களின் நீளம் அதிகமாக இருப்பதால் ரசிகர்களுக்கு ஒரு அலுப்பு ஏற்படுகிறது. அஜித்தின் வலிமை படத்திற்கும் இந்த காரணம் பெரிதும் சொல்லப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 3 மணி நேரம் வலிமை படம் இருந்ததால் ரசிகர்கள் எரிச்சல் அடைந்தனர்.

மேலும் இதனாலேயே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து படங்களைப் பார்க்க பயப்படுகின்றனர். இந்நிலையில் விக்ரம் படமும் கிட்டத்தட்ட 2 மணி நேரம் 53 நிமிடங்கள் படமாக்கப்பட்டுள்ளதாம். இதனால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது சற்று அலுப்பு வரக்கூடும் என சொல்லப்படுகிறது.

ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படமும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் எடுத்துக் கொண்டாலும் திரைக்கதையால் எல்லாவற்றையும் மறக்கச் செய்து ரசிகர்களை பார்க்கச் செய்தார். அதே போல் விக்ரம் படமும் சுவாரசியமான கதைக்களம் மூலம் ரசிகர்களை கவருவார் லோகேஷ் என எதிர்பார்க்கப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.