புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கமலிடம் ரெண்டு நிபந்தனையை வைத்த மம்மூட்டி.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

kamalhassan: தற்போது கமல்ஹாசன் நடிப்பிலும், தயாரிப்பிலும் மும்மரமாக செயல்பட்டு வருகிறார். அத்துடன் இவருடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார்.

அத்துடன் இவருடைய தயாரிப்பில் எப்படியாவது ஒரு படத்திலேயே நடிக்க வேண்டும் என்று பலரும் ஆசையுடன் சுற்றி வருகிறார்கள். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் இவரிடம் இரண்டு கோரிக்கையை வைத்திருக்கிறார். அதாவது மம்முட்டி மற்றும் கமல் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

Also read: பெரிய இயக்குனர்களுக்கு கமல் கொடுத்த 5 தரமான ப்ளாக்பஸ்டர்ஸ்.. ஒரே முறையோடு நிறுத்திக் கொண்ட உலகநாயகன்

ஆனாலும் இதுவரை இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து எந்த ஒரு படங்களிலும் நடித்ததே இல்லை. அதனால் நாம் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கலாம் இது என்னுடைய ஆசை என்று கமல்ஹாசனிடம் மம்முட்டி கூறியிருக்கிறார். அவரும் கூடிய விரைவில் இது நடக்கும் என்று வாக்குறுதியை கொடுத்திருக்கிறார்.

அத்துடன் கமலிடம் இன்னொரு ஆசையும் வைத்திருக்கிறார். அதாவது மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஒரு சில படங்களில் நடித்து வெற்றி நடை போட்டு வருகிறார். அப்படிப்பட்ட இவர் தமிழில் மிகப் பெரிய ஹீரோவாக மாற வேண்டும். அது கண்டிப்பா நீங்க நினைத்தால் முடியும் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: ரஜினி கமல் ஒரே நாளில் மோதிக்கொண்ட 5 படங்கள்.. இரண்டு படங்களில் மூக்கை உடைத்துக் கொண்ட உலகநாயகன்

அதனால் உங்க ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். கமலும் அதற்கு நான் பொறுப்பு என்று சொல்லி இருக்கிறார். சொன்ன கையோட இயக்குனர் லோகேஷ் மற்றும் எச் வினோத் இவர்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். அவர்களும் கமலுக்காக சரி என்று சொல்லி இருக்கிறார்கள்.

அந்த வகையில் துல்கர் சல்மானுக்கு ராஜ்கமல் தயாரிப்பில் பெரிய இயக்குனருடன் ஒரு பட வாய்ப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது. இதைத்தான் சொல்வார்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று. அதாவது மம்முட்டிக்கு கமலுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் அவருடைய மகனை தமிழில் ஹீரோவாக ஆக்க வேண்டும். இந்த இரண்டு ஆசையும் கமல் மூலமாக நிறைவேறப் போகிறது.

Also read: வேணாம்பா உங்க ப்ராஜெக்ட்-ன்னு கமலுக்கு குட்பை சொன்ன இயக்குனர்.. பல்லை பிடித்து பார்த்த உலகநாயகன்

Trending News