Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கமல் போட்ட விதை, மின்னல் வேகத்தில் வசூல் சாதனை.. மஞ்சுமல் பாய்ஸ் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

கமல் போட்ட விதை, மின்னல் வேகத்தில் வசூல் சாதனை.. மஞ்சுமல் பாய்ஸ் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Manjummel Boys Box Office: கடந்த இரு வாரங்களாகவே சோசியல் மீடியாவை மஞ்சுமல் பாய்ஸ் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. குணா படத்தை மையமாக வைத்து அற்புதமான ஒரு படைப்பை கொடுத்திருக்கும் இயக்குனர் சிதம்பரம் மற்றும் படக்குழுவினர் இப்போது ரசிகர்களின் […]

Manjummel Boys Box Office: கடந்த இரு வாரங்களாகவே சோசியல் மீடியாவை மஞ்சுமல் பாய்ஸ் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. குணா படத்தை மையமாக வைத்து அற்புதமான ஒரு படைப்பை கொடுத்திருக்கும் இயக்குனர் சிதம்பரம் மற்றும் படக்குழுவினர் இப்போது ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் இப்படம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு மூலகாரணம் ஆண்டவர் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர் போட்ட விதை தான் 32 வருடங்களுக்கு பிறகு விருட்சமாக வளர்ந்துள்ளது.

அதேபோல் குணா படம் மட்டுமல்ல அந்த குகை கூட இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இளம் தலைமுறையினர் அனைவரும் தற்போது கொடைக்கானலுக்கு படையெடுத்து செல்வதையும் காண முடிகிறது. இப்படி புது ட்ரெண்ட்டை உருவாக்கி இருக்கும் மஞ்சுமல் பாய்ஸ் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது.

இப்படம் வெளியான முதல் வாரத்திலேயே 50 கோடி வரை வசூலித்து பலரின் புருவத்தையும் உயர்த்த வைத்தது. அதேபோல் தமிழ்நாட்டிலும் எதிர்பாராத அளவுக்கு கிடைத்த வரவேற்பு இந்த வசூலுக்கு கூடுதல் பலமாக இருந்தது. அதை தொடர்ந்து தற்போது இப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே மலையாளத்தில் வெளியான பிரேமலு, பிரமயுகம் ஆகிய படங்கள் 100 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை 75 கோடிகளை தான் வசூலித்திருந்தது. அப்படங்களுக்கு அடுத்ததாக வெளிவந்து கண் சிமிட்டும் நேரத்தில் 100 கோடியை தட்டி தூக்கி இருக்கிறது இந்த மஞ்சுமல் பாய்ஸ்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.