புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சிவகார்த்திகேயனுக்காக கெஞ்சிய நெல்சன்.. விடாப்பிடியாக மறுத்த ரஜினிகாந்த்

நெல்சன் பீஸ்ட் படத்தை தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் முதலில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இணையத்தில் தகவல் வெளியானது. அதாவது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியிருந்தார். அதிலிருந்து இவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.

Also Read :ஜெயிலர் படத்தால் அடித்த அதிர்ஷ்டம்.. மீண்டும் பிஸியான பால் பப்பாளி நடிகை

அதுமட்டுமின்றி நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியிருந்தார். இதனால் ரஜினியின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது சிவகார்த்திகேயனின் கனவு. நெல்சனிடம் ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.

இதனால் நெல்சன், ரஜினியின் சின்ன வயது கதாபாத்திரத்தை தயார் செய்து அதில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என எண்ணியிருந்தார். ஆனால் ரஜினியிடம் இதைப் பற்றி எல்லாம் சொல்லாமல் இதில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் பண்ணட்டுமா என கேட்டுள்ளார்.

Also Read :அல்லோலப்படும் வாரிசு படக்குழு.. ஜெயிலர் படத்திற்கு நெல்சன் போட்ட கண்டிஷன்

ஆனால் அதற்கு ரஜினி வேண்டாம் என மறுத்து விட்டாராம். காரணம் சூப்பர் ஸ்டார் படம் என்றால் அதில் ரஜினி மட்டும் தான் ஹீரோவாக இருக்கவேண்டும். இதனால் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டாம் என உறுதியாக ரஜினி சொல்லிவிட்டார்.

இதை அறிந்த சிவகார்த்திகேயன் செம அப்சட்டில் இருந்தாராம். அதுமட்டுமின்றி சிவாகார்த்திகேயனுக்காக நெல்சன் எழுதி இருந்த கதாபாத்திரத்தில் தரமணி வசந்த் ரவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ஜெயிலர் படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும்.

Also Read :ரஜினியை பாடாய்ப் படுத்தும் நெல்சன்.. பரபரப்பை கிளப்பிய ஜெயிலர் ஷூட்டிங்

Trending News