புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வளர்ரது பிடிக்காமல் பண்ணும் கேவலமான அரசியல்.. ரசிகர்களின் மீது நெருப்பை கக்கும் நெல்சன்

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த நெல்சனுக்கு இப்பொழுது பீஸ்ட் படம் சற்று சறுக்கலை ஏற்படுத்திவிட்டது. இதனால் அவருக்கு நிறைய இடங்களில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் வந்த வண்ணம் இருக்கின்றது.

பீஸ்ட் படம் நன்றாகத்தான் இருந்தது, ஆனால் விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் நடிக்கையில், அந்த ரசிகர்களின் முழுமையான எதிர்பார்ப்பை நெல்சனால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் தான் படம் நன்றாக இல்லை என்ற பிம்பம் தோன்றுகிறது.

நெல்சன் ஏற்கனவே ரஜினியின்169 படத்தை இயக்கவிருந்தது. இந்த பீஸ்ட் படத்தினால் வந்த எதிர்மறை விமர்சனங்களால் சூப்பர் ஸ்டாரின் படம் இப்பொழுது கேள்விகுறியாய் நிற்கிறது. இதனால் சூப்பர் ஸ்டாரும், நெல்சனும் என்ன பண்ணுவது என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ், ரஜினியிடம் நீங்கள் விரும்பினால் வேறு இயக்குனர்களை கூட வைத்து உங்களின் அடுத்த படத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவுரை கூறி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களும், மற்றவர்களும் நெல்சனிடம் உள்ள சரக்கு தீர்ந்தது, இனிமேல் அவரை நம்புவது வேஸ்ட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு குழம்பி இருக்கும் நெல்சன், ஒரு படம் தோல்வி அடைந்ததால் ஒருவரது திறமையை மோசமாக விமர்சிப்பது முட்டாள்தனத்தின் உச்சம். அந்த உரிமை யாருக்கும் கிடையாது.

உலகத்தில் பலமுறை சறுக்கிய சாதனையாளர்களும் இருக்கிறார்கள். அதனால் ஒரு படத்தை வைத்து ஒருவரது திறமையை கணக்கிட கூடாது என்று ரசிகர்களிடம் நெருப்பை கக்கும் விதமாக பேசி வருகிறார்.

Trending News