விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்துள்ள தில் ராஜு தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களை தயாரித்தவர். இந்நிலையில் முதன்முதலாக விஜய்யின் வாரிசு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகியுள்ளார். இதனிடையே துணிவு படத்திற்கு கிடைத்த திரையரங்குகளை விட, வாரிசு படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைத்தது. இதனால் செம காண்டான தில் ராஜு விஜய் தான் நம்பர் ஒன் என தலையில் தூக்கி வைத்து பேசி சர்ச்சையை கிளப்பினார்.
இதனால் கடுப்பானது அஜித் ரசிகர்கள் மட்டுமில்லை, தெலுங்கு சினிமா ரசிகர்களும் தான். ஏன்னென்றால் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இவர் தயாரித்த நிலையில், அங்குள்ள நடிகர்களை ஓரங்கட்டி விட்டு, இங்குள்ள விஜய்யை தூக்கி வைத்து பேசியது பெரும் சர்ச்சையானது. சரி ஒரு வழியாக இந்த சர்ச்சைகளெல்லாம் மறைந்து போய், வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியே நடந்து முடிந்துவிட்டது.
மேலும் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாரிசு படம் விநியோகம் செய்யப்பட்டது. இப்போது வாரிசு படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத நிலையில், படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசாக தயாராக உள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படத்தையும் தமிழிலேயே தயாரிக்க தில் ராஜு முடிவு செய்துள்ளார்.
அதற்காக மிகப்பெரிய வலையாக வளர்ந்து வரும் நடிகருக்கு தில் ராஜு வீசுயுள்ளது தான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தனது அடுத்த படமான தளபதி 67 படத்தில் நடிக்க ஆயத்தமாகி வரும் நிலையில், அவரை நம்பி அடுத்தடுத்த படத்தை தயாரிப்பதில் தில் ராஜுவுக்கு பல சிக்கல்கள் உண்டு. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழில் தனது அடுத்த படத்தை தயாரிக்கலாம் என தில் ராஜு முடிவு செய்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தாண்டு வெளியான டான் திரைப்படம் சக்கைப் போடு போட்டது. ஆனால் பிரின்ஸ் திரைப்படம் படுமோசமாக தோல்வியடைந்தது. இதனால் அடுத்த படமான மாவீரன் படத்தில் எப்படியாவது வெற்றிக் கொடுத்திட வேண்டுமென போராடி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு பட இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் நடிகர் அல்லு அர்ஜுனின் டீ.ஜே, பவன் கல்யாண் நடிப்பில் கப்பர் சிங் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். ஏற்கனவே பிரின்ஸ் படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் அனுடீப்பை நம்பிய சிவகார்த்திகேயனை காலை வாரி விட்டு சென்றார். தற்போது மீண்டும் இன்னொரு தெலுங்கு பட இயக்குனருடன் சேர்ந்து படத்தில் நடிக்க போகிறார் என்றால், அவருக்கு சற்று தைரியம் தான் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.